2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

’சிவபெருமானே என்னை மன்னிக்கவும்’

A.K.M. Ramzy   / 2021 ஜூலை 14 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுரை:

சுவாமி சிவபெருமானை அவமதிக்கும் வகையில் வெளியான 'ஸிகா' என்ற திரைப்பட போஸ்டருக்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அப்பட இயக்குநர் ஆர்.விஜயமுருகன் மன்னிப்பு கேட்டார்.

கடந்த சில ஆண்டுகளாக இந்து கடவுள்களையும், மத நம்பிக்கைகளையும் கேலி செய்யும் விதமாக சினிமா எடுத்து வருகின்றனர். தற்போது 'ஓம் டொக்கிஸ் நிறுவனம்' தயாரிப்பில் இயக்குநர் விஜயமுருகன், நடிகர் 'ஆடுகளம்' முருகதாஸ், சாய் பாஸ்கர் இசையில், விளம்பர வடிவமைப்பு ஜோசப் ஜெக்சன் ஆகியோர் வெளியிட்டுள்ள 'ஸிகா' திரைப்பட போஸ்டரில் இந்துக்கள் போற்றி வணங்கும் சிவபெருமானுக்கு கொரோனா உள்ளது போல் முகக் கவசம், ஒக்சிஜன் சிலிண்டர் போன்றவைகளுடன் தோன்றியுள்ளார்.இதற்கு இந்து மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .