Princiya Dixci / 2021 செப்டெம்பர் 14 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஹனீபா
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரை 217 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஜீ.சுகுணன், இன்று (14) தெரிவித்தார்.
மாவட்டத்தில் தற்போது பருவகால மழை பெய்யது வருவதால், டெங்கு நுளம்பு பரவக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அண்மைக்காலமாக டெங்கு நோயாளர்கள் அதிகளவில் இனங்காணப்பட்டு வருகின்றனர் எனவும், கூறினார்.
அட்டாளைச்சேனை, நிந்தவூர் மற்றும் காரைதீவு ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் அதிகமாக டெங்கு பரவக் கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கொரோனா தொற்றுத் தாக்கத்திலும் கல்முனைப் பிரதேசத்தில் ஒருங்கினைந்த சுகாதார மேம்பாட்டு அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் ஊடாக டெங்கொழிப்பு நடவடிக்கையை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகள் தோறும் டெங்கொழிப்பு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார.
பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுவினர், டெங்கொழிப்பு செயலணி, சமூக மட்ட தலைவர்கள் ஆகியோர் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று டெங்குக் காய்ச்சல் தொடர்பாக மக்களுக்கு விழிப்பூட்டல் செய்யவுள்ளதாகவும் கூறினார்.
வீடுகளுக்கு வரும் டெங்கொழிப்பு குழுவினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனக் கேட்டுள்ளார்.
டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான வெற்றுக்காணிகளை வைத்திருப்பவர்கள் இரண்டு வார காலத்துக்குள் துப்புரவு செய்ய வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எச்சரித்தார்.
3 hours ago
4 hours ago
7 hours ago
22 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago
22 Nov 2025