R.Maheshwary / 2021 செப்டெம்பர் 16 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவி
ஹேவாஹேட்ட- ராத்தங்கொட தோட்டத்தில் வாழும் சுமார் 60 குடும்பங்கள் தமக்கான குடிநீர் வசதியை பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
ஆரம்பத்தில் சுமார் 25 குடும்பங்களே அங்கு வசித்து வந்துள்ள நிலையில், தற்போது குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் நீரின் தேவையும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், குறித்த 60 குடும்பங்களும் அப்பகுதியில் உள்ள ஊற்று நீரையே தமது தேவைக்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
எனினும் தற்போது ஊற்றிலிருந்து வரும் நீரின் அளவு குறைந்துள்ளதால், 60 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் குடிநிரின்றி அவதியுறுகின்றனர்.
எனவே, தமக்கான குடிநீர் திட்டத்தை ஏற்படுத்திக்கொடுக்க சம்பந்தப்பட்டவர்கள் முன்வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .