2021 ஓகஸ்ட் 03, செவ்வாய்க்கிழமை

கோப்பாயில் மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்ற கொள்ளையர்கள்

Freelancer   / 2021 ஜூன் 12 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் - கோப்பாய், இராசபாதை வீதியில் சுகாதார திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளைக் கும்பல் ஒன்றினால் கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளது.

கோப்பாய் இராசபாதை வீதியில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் பட்டதாரி பயிலுநராகக் கடமையாற்றும் உத்தியோகத்தர், தனது அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய போது, ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் அவரை வழிமறித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளை நிறுத்திய அவரிடம் கதைக்க முற்பட்டு கொள்ளையர்கள் அவரை தள்ளிவிட்டு மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டு தப்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வழங்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். - R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .