2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

இடமாற்றம் செப்.21 அமுல்

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 16 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா, எம்.எஸ்.எம்.ஹனீபா

கொரோனா தொற்றுக் காரணமாக இவ்வாண்டு ஜனவரி மாதம் நடைமுறைப்படுத்தவிருந்த இடமாற்றங்கள், இம்மாதம் 21ஆம் திகதிக்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.

திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை மற்றும் அம்பாறை போன்ற பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கு கடிதம் மூலம் இடமாற்றம் தொடர்பாக அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது இடமாற்றம் வழங்கிய புதிய நிலையத்துக்குச் சென்று கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்ளுமாறும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் கையொப்பமிட்ட கடிதம், அனைத்து நிறுவன தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.

2021ஆம் ஆண்டின் வருடாந்த இடமாற்ற சபையின் முடிவுகளை EP.gov.lk எனும் இணையத்தளத்தில் பார்வையிடலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X