R.Maheshwary / 2021 செப்டெம்பர் 12 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
மடுல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ- கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு தோட்டத்தில் சிரமதான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை, தோட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தியதாக தொழிலாளர்கள் குற்றஞ் சுமத்துகின்றனர்.
காசல்றீ நீர்தேக்கத்துக்கு நீர் ஏந்திச் செல்லும் கெர்க்கஸ்வோல்ட்
கிளை ஆறு நீண்டகாலமாக , மழை காலங்களில்
லெச்சுமி தோட்ட மத்திய பிரிவு மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்தனர்.
இந்த நிலையில், தோட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை ஆரம்பித்து, இடையில் கைவிட்டது.
இதனால் ஆற்றை அகலப்படுத்தும் நடவடிக்கையை தோட்ட மக்கள் நேற்று (11) முன்னெடுத்த போது, தோட்ட நிர்வாகம் அதனை தடுத்து நிறுத்தியது.
எனினும் அம்பகமுவ பிரதேச செயலகத்தில்
எவ்வித அனுமதியினையும் பெறாமலேயே தோட்ட நிர்வாகம் இந்த பணியை ஆரம்பித்து இடையில் இடைநிறுத்தியது.
இது தொடர்பில், கெர்க்கஸ்வோல்ட் தோட்ட முகாமையாளர் நிலான் லியனகேவிடம் வினவிய போது, தோட்டநிர்வாகத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டத்திற்காகவே, குறித்த ஆற்றை அகலபடுத்தும் நடவடிக்கையை தாம் முன்னெடுத்ததாக அவர் தெரிவித்தார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago