2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

அதிநவீன உபகரணம் வழங்கிவைப்பு

Princiya Dixci   / 2021 ஜூலை 21 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காச நோய் மற்றும் மலேரியா போன்ற நோய்களைக் கண்டறிவதற்கான அதிநவீன நுணுக்குக்காட்டி உபகரணமொன்று  வழங்கிவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் முன்னிலையில்,
மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் வைத்து நேற்று முன்தினம் (19) இந்த உபகரணம் வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நுண்ணுயிரியல் வைத்திய நிபுணர் பி.தேவகாந்தன் உபகரணத்தைப் பெற்றுக்கொண்டதுடன், காசநோய் மற்றும் மலேரியா ஆகிய நோய்களைத் தெளிவாகத் கண்டுபிடித்து, நோயாளர்களுக்கு உரிய சிகிச்சைகளை எதுவித தங்குதடையும் இன்றி மேற்கொள்ளலாமென அவர் இதன்போது தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தற்போது பயன்படுத்திவரும் நுணுக்குக்காட்டி இயந்திரமானது பழுதடைந்துள்ளமையால், பரிசோதனைகளை விரைவாக மேற்கொள்வதில் தாமதம் நிலவிவருவதாகவும்,  மேற்படி நோய்களைக் கண்டறிவதற்கு வேறு வைத்தியசாலைகளுக்கே நோயாளர்கள் அனுப்பிவைக்கப்பட்டு, பரிசோதனைகளை மேற்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

என்.கே.டி குறுப் ஓஃப் கம்பனியின் தலைவர் பீ.நல்லரெத்தினம், தாமாகவே முன்வந்து 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான இந்த அதிநவீன தொழில்நுட்ப வசதியைக் கொண்ட நுணுக்குக்காட்டியை, போதனா வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .