2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

சேதனப் பசளை உற்பத்தி ஊக்குவிப்பு வேலைத்திட்டம்

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 21 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்

நஞ்சற்ற உணவு உற்பத்தியை ஊக்குவிக்கும் ஜனாதிபதியின் தூர நோக்கு மிக்க தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், நாடு தழுவி ரீதியில் பல்வேறான சிவில் சமூக அமைப்புகளின் மூலமும் அரச, தனியார் நிறுவனங்களின் மூலமாகவும் சேதனப் பசளை உற்பத்திக்கான வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக, அக்கரைப்பற்று-12, கிராம அபிவிருத்திச் சங்கத்தின் மூலம் சேதனப் பசளையினை உற்பத்தி செய்யும் வேலைத் திட்டம், இன்று (21) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் எம்.பி.எம்.பௌஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது, அக்கரைப்பற்று பிரதேச செயலக உயரதிகாரிகள், விவசயாத் திணைக்கள உத்தியோகதர்கள், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், துறைசார் முக்கியஸ்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, குறித்தொகுத்கப்பட்ட காலப் பகுதிக்குள் சுமார் 5 தொன் சேதனப் பசளை உற்பத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சூழலில் இலகுவில் கிடைக்கும் தாவர விலங்குக் கழிவுகளைக் கொண்டு குறைந்த செலவில் அதி கூடிய பயன்பாட்டைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இச்சேதன உற்பத்தி வேலைத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .