2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

அதே இடத்தில் விபத்து: பெரிய பாதிப்பு இல்லை

Editorial   / 2023 மே 07 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் வேன் ஒன்று  சனிக்கிழமை (6)  குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது.

ரதெல்ல பிரதேசத்தில் இருந்து நுவரெலியாவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது வேனில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக    வாகனத்தை கட்டுப்படுத்த சாரதிக்கு முடியாமல் ​போனது. அந்தவான் பின்நோக்கி சென்றே விபத்துக்கு உள்ளாகியுள்ளது.   

இதில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார்  தெரிவிக்கிறனர்.

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 ஜனவரி மாதம்  20ம் திகதி நானுஓயா-  ரதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் உயிரிழந்ததுடன் 51 பேர் படுகாயமடைந்திருந்தனர் அந்த இடத்திலேயே இந்த வேனும் குடைசாய்ந்து விபத்துக்கு உள்ளாகியது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X