Freelancer / 2021 ஜூன் 19 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார், செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு கூழாமுறிப்பு அ.த.க.பாடசாலையின் தற்காலிக கட்டடம் ஒன்று இன்று (19) காலை தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
இந்த தீ விபத்து தொடர்பில் பாடசாலை அதிபரால் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலைக்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளதா? அல்லது விபத்தா என்பது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
பயணத்தடை விதிக்கப்பட்டு பாடசாலை மூடப்பட்டுள்ள வேளையில் இன்று (19) காலை பாடசாலைக்கு அதிபர் சென்று பார்வையிட்ட போது தற்காலிக கட்டடம் தீயில் எரிந்துள்ளது.
இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் 24 கதிரைகள், 20 மேசைகள், 4 கரும்பலைககள் என்பன தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. R
22 minute ago
23 minute ago
34 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
23 minute ago
34 minute ago
42 minute ago