2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ஏ.டி.எம். இயந்திரத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்த்துக் கொள்ளை

Ilango Bharathy   / 2021 ஜூலை 23 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் ஏ.டி.எம். இயந்திரங்களை உடைந்து கொள்ளையிடும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.



இந்நிலையில் மராட்டிய மாநிலத்தில்  ஏ.டி.எம். இயந்திரத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்துக் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 பூனே அருகேயுள்ள ஏ.டி .எம் மையமொன்றே இவ்வாறு  வெடிவைத்துத் தகர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்விடயம் தொடர்பான விசாரணையில் ஈடுபட்ட பொலிஸார் கண்காணிப்புப் கெமெராவை ஆய்வு செய்தபோது இரு நபர்களின் உருவம் அதில் பதிவாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

 குறித்த ஏ.டி.எம். இயந்திரத்தில் இந்திய மதிப்பில் ரூபாய் 28 லட்சம் முதல் 30 லட்சம் வரை பணம் இருந்ததாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .