2021 செப்டெம்பர் 21, செவ்வாய்க்கிழமை

பாடசாலை மேம்படுத்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை

Super User   / 2010 நவம்பர் 06 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம்.ரம்ஸீன்)

கம்பளை வலய கல்வி அலுவலகம் எதிர்வரும் 2011ஆம் ஆண்டு முதல் பாடசாலை மேம்படுத்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் பாடசாலைகளின் அபிவிருத்தியில் பெற்றோர் , பழைய மாணவர்களை உள்வாங்கும் வகையில் பாடசாலை அபிவிருத்திக் குழுக்கள் அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் தலா மூன்று பெற்றோர், பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அங்கம் வகிப்பர். இக்குழு இதுவரை நடைமுறையில் இருந்த பாடசாலை அபிவிருத்தி குழுவுக்கு பதிலாக அமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கம்பளை வலய பாடசாலை அதிபர்கள் இவ்வாரத்திற்குள் இக்குழுக்களை அமைத்து அதன் விபரங்களை வலய கல்விப் பணிமனைக்கு  ஒப்படைக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .