2023 ஜூன் 01, வியாழக்கிழமை

4 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்- 55 வயதான டாக்டர் கைது

Editorial   / 2023 மார்ச் 29 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வயிற்று வலியால் அவதிப்பட்ட நான்கு வயதான சிறுமிக்கு பாலியல் ரீதியில் துன்புறுத்திய குற்றச்சாட்டின் கீழ், 55 வயதான வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம், புதுடெல்லியின் வடமேற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஆதர்ஸ் நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது 4 வயது பெண் குழந்தை வயிற்று வலியால் அவதிப்படுவதை அறிந்து, அவளை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றார்.

குழந்தையுடன் டாக்டரின் அறைக்கு சென்ற இளம்பெண், பணப்பையை வெளியே மறந்து வைத்து விட்டு வந்ததை உணர்ந்தார்.

இதையடுத்து அவர் டாக்டரிடம் குழந்தையை கொடுத்துவிட்டு பணப்பையை எடுக்க வெளியே சென்றார்.

பின்னர் அவர் மீண்டும் டாக்டர் அறைக்கு திரும்பியபோது அங்கு 55 வயதான டாக்டர் தனது 4 வயது மகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தி கொண்டிருப்பதை கண்டு அதிர்ந்துபோனார்.

உடனடியாக குழந்தையுடன் அங்கிருந்து வெளியேறிய இளம்பெண், டாக்டர் மீது பொலிஸார் புகார் அளித்தார். அதன் பேரில்  அந்த டாக்டரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .