2022 ஜனவரி 25, செவ்வாய்க்கிழமை

தனஞ்சய சதம்: முன்னிலையில் இலங்கை

Shanmugan Murugavel   / 2021 டிசெம்பர் 02 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் தனஞ்சய டி சில்வா பெற்ற சதத்துடன் இலங்கை முன்னிலையில் காணப்படுகின்றது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தை, தமது இரண்டாவது இனிங்ஸில் 2 விக்கெட்களை இழந்து 46 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த இலங்கை, குறிப்பிட்ட நேரத்தில் சரித் அஸலங்கவை வீராசாமி பெருமாளிடம் இழந்தது.

பின்னர், பதும் நிஸங்க, தனஞ்சய டி சில்வாவின் இணைப்பில் இனிங்ஸை இலங்கை கட்டியெழுப்பிய நிலையில், 66 ஓட்டங்களுடன் றொஸ்டன் சேஸிடம் நிஸங்க வீழ்ந்ததோடு, அடுத்து வந்த தினேஷ் சந்திமாலும் சிறிது நேரத்திலேயே சேஸிடம் வீழ்ந்திருந்தார்.

இதையடுத்து வந்த ரமேஷ் மென்டிஸின் இணைப்பில் டி சில்வா ஓட்டங்களைச் சேர்த்த நிலையில், 25 ஓட்டங்களுடன் அணித்தலைவர் கிறேய்க் பிறத்வெய்ட்டிடம் மென்டிஸ் ஆட்டமிழந்திருந்தார்.

தொடர்ந்து வந்த சுரங்க லக்மால், அஞ்சலோ மத்தியூஸ் ஆகியோர் உடனேயே பெருமாளிடம் வீழ்ந்திருந்தனர். இதையடுத்து, லசித் எம்புல்தெனியவின் இணைப்பில் தொடர்ந்தும் டி சில்வா ஓட்டங்களைப் பெற்று வருகையில் இன்றைய நான்காம் நாள் முடிவில் தமது இரண்டாவது இனிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 328 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. களத்தில் டி சில்வா 153, மென்டிஸ் 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் காணப்படுகின்றனர்.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இலங்கை

இலங்கை: 204/10 (துடுப்பாட்டம்: பதும் நிஸங்க 73, திமுத் கருணாரத்ன 42, அஞ்சலோ மத்தியூஸ் 29 ஓட்டங்கள். பந்துவீச்சு: வீராசாமி பெருமாள் 5/35, ஜோமெல் வொரிக்கான் 4/50, றொஸ்டன் சேஸ் 1/64)

மேற்கிந்தியத் தீவுகள்: 253/10 (துடுப்பாட்டம்: கிறேய்க் பிறத்வெய்ட் 72, ஜெர்மைன் பிளக்வூட் 44, கைல் மேயர்ஸ் ஆ.இ 36, என்குருமாஹ் பொன்னர் 35 ஓட்டங்கள். பந்துவீச்சு: ரமேஷ் மென்டிஸ் 6/70, பிரவீன் ஜெயவிக்கிரம 2/59, லசித் எம்புல்தெனிய 2/94)

இலங்கை: 328/8 (தனஞ்சய டி சில்வா ஆ.இ 153, பதும் நிஸங்க 66, லசித் எம்புல்தெனிய ஆ.இ 25, ரமேஷ் மென்டிஸ் 25 ஓட்டங்கள். பந்துவீச்சு: வீராசாமி பெருமாள் 3/100, றொஸ்டன் சேஸ் 2/82, கிறேய்க் பிறத்வெய்ட் 1/11)

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X