2021 ஒக்டோபர் 17, ஞாயிற்றுக்கிழமை

சிலாபம் மீன் சந்தைக்குப் பூட்டு

Nirosh   / 2020 நவம்பர் 21 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கும்வகையில், சிலாபம் பொது மீன் சந்தையை ஒருவாரக் காலத்துக்கு மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் கே.பி.சந்தன குமார தெரிவித்துள்ளார்.

இதன்படி இன்று (21) முதல் ஒருவாரத்திற்கு குறித்த பொது மீன் சந்தை மூடப்படவுள்ளது. சிலாபம் பொது மீன் சந்தைக்கு வருகை தந்தோரில் 50 பேருக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிலாபம் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான பொதுசுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகள் குழு சிலாபம் நகர சபை கட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (20) நடத்திய விஷேட கலந்துரையாடலின் போதே, பொது மீன் சந்தையை ஒரு வார காலத்திற்கு மூடவது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

எனினும், சிலாபத்திலுள்ள மீனவர்கள் மீன்களை சிலாபம் நகரிலுள்ள துறைமுகத்துக்கு அருகில் விற்பனை செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .