Editorial / 2020 செப்டெம்பர் 22 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜூட் சமந்த
மாதம்பே பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர், நேற்று (21) இரவு 9.45 மணியளவில் அங்கிருந்து தப்பியோடியுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
காக்காபள்ளி- சேனாநாயக்கவத்த பகுதியைச் சேர்ந்த, 25 வயதுடைய விஜேதுங்க ஆராச்சிலாகே தோன் நிரோஷன் மதுசங்க என்ற கைதியே இவ்வாறு தப்பியோடியுள்ளார்.
ஹெரோய்ன் போதைப்பொருள் வர்த்தகச் செயற்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே, கடந்த 17 ஆம் திகதி இவரை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பியோடிய கைதியை கைதுசெய்வதற்காக, மாதம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
04 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
04 Dec 2025