2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

பண்டிகைக்காலத்துக்கு BAIRAHAவின் தெரிவுகள்

Nirosh   / 2021 ஜனவரி 17 , பி.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டிகைக்காலத்துக்கு BAIRAHA வின் தெரிவுகள் தொற்றுப் பரவும் காலகட்டத்தில் பண்டிகைக் காலத்தை கொண்டாடி மகிழ சுவை நரம்புகளைத் தூண்டும் புத்தம் புதிய தயாரிப்பு வரிசையை Bairaha அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

தொற்றுப் பரவல் காரணமாக நாம் புதிய இயல்பு நிலைக்கு கடந்துள்ளோம். ஆனால் மிக முக்கியமாக இது குடும்பங்களை ஒன்றிணைத்துள்ளது. நாங்கள் இப்போது
வீடுகளிலிருந்து அலுவலக வேலைகளைச் செய்கிறோம், நமது பிள்ளைகள் இணைய
வழியில் வகுப்புகளில் இணைந்து கற்று வருகின்றனர்.

இருப்பினும், ஒரு விஷயம் மட்டும் மாறவில்லை - புதிய மற்றும் ஆரோக்கியமான ஒன்றை சாப்பிட வேண்டும் எங்கள் சதா ஏக்கமே அது. இதன் சிறப்பை அடையாளம் கண்டுகொண்டு, சுவை வடிவம், வாயில் சுவையை ஊறவைக்கும் வாசனை மற்றும் சிறந்த சமையல் அனுபவம் ஆகியவற்றில் எவ்விதமான குறைவுமின்றி இந்த காலகட்டத்தை அற்புதமான தருணங்களாக மாற்றுவதற்காக தனது புதிய nugget தயாரிப்பு வரிசையை Bairaha அறிமுகப்படுத்தியுள்ளது.

உங்கள் அபிமானத்தை வென்ற வர்த்தகநாமமான Bairaha, கோழி இறைச்சியை
மூலமாகக் கொண்ட தயாரிப்பு வரிசையை ஆராய்ச்சி செய்து அவற்றை வெளிக்கொண்டு வருவதற்கு மாதக் கணக்கில் தனது முயற்சியையும், நேரத்தையும் செலவிட்டுள்ளதுடன், இதில் இலங்கையில் முதன்முதலாக அறிமுகமாகும் கிறீம் சீஸ் (cream cheese) அடங்கிய Chicken Cheese Nuggets உம் அடங்கியுள்ளது. பண்டிகைக்காலத்தை ஒட்டியதாக அண்மையில் இணைய வழியில் இந்த உற்பத்தி வரிசையின் அறிமுகம் இடம்பெற்றுள்ளது.

ஒவ்வொரு முறை கடிக்கும் போதும் புத்தம்புதிய கிறீம் சீஸை வெளியேற்றும் Chicken
Cheese Nuggets உடன், உங்கள் பிள்ளைகள் இணைய வழி வகுப்பில் கற்கும் போதோ
அல்லது நீங்கள் வீட்டிலிருந்து அலுவலக வேலையை முன்னெடுக்கும் போதே பக்கத்தில் வைத்துக் கொண்டு உட்கொள்வதற்கு சிறந்த ஒரு நொறுக்குத்தீனியாக Mini Kievs காணப்படுகிறது.

உள்நாட்டில் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் உண்மையான கார மிளகாயைப் பயன்படுத்தி குறிப்பாக புதிய தயாரிப்பை உற்பத்தி செய்வதற்காக வளர்க்கப்படுகின்ற கார மிளகாய் கொண்டு தயாரிக்கப்படும் Chicken Kochchi Bites ஐ ருசிக்கும் வாய்ப்பையும் Bairaha எமக்கு வழங்குகிறது.

கோழியின் நெஞ்சு இறைச்சியுடன் (chicken breast) தயாரிக்கப்படும் Chicken Kochchi Bites, தங்கள் வாழ்க்கையை சுவாரசியமாக்கிக் கொள்ள விரும்பும் அனைத்து இலங்கையர்களுக்குமான ஒரு பரிசு.

Chicken Skewers உடன் ஒவ்வொரு நாளும் உங்கள் வீட்டில் விருந்து இடம்பெறுவதை
நீங்கள் உறுதிசெய்யலாம். kebab போன்ற இத்தயாரிப்பு எளிதில் ஆக்கக்கூடியதாக
உள்ளதுடன், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் barbeque செய்வது அல்லது நீங்கள்
விரும்பும் எந்த காய்கறிகளுடன் சேர்த்து பொரிக்க வேண்டியது மாத்திரமே.

Chicken Munch நிச்சயமாக இல்லத்தரசியின் ஒரு சிறந்த துணையாக மாறும். நீங்கள்
செய்ய வேண்டியதெல்லாம், மெரினேட் செய்யப்பட்ட கோழி இறைச்சியின் தொடைப்பாகங்களால் (marinated chicken thigh) ஆன Chicken Munch ஐ ஒரு பாத்திரத்தில்
சேர்த்து மரக்கறி எண்ணெய் அல்லது Butter இல் சுமார் ஐந்து முதல் ஆறு நிமிடங்கள்
வரை பொரிக்க வேண்டியது மாத்திரமே.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .