S.Sekar / 2021 ஜூலை 01 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் நான்கு அரசாங்க வைத்தியசாலைகளுக்கு அத்தியாவசியமான மருத்துவ சாதனங்களை வழங்க யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி முன்வந்திருந்தது. நோயாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்கும் கொள்ளளவுத் திறனை அதிகரித்துக் கொள்வதற்கான பங்களிப்பாக இந்த அன்பளிப்பு அமைந்திருந்தது. இலங்கையில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுக்கு 257,225 க்கும் அதிகமானவர்கள் இலக்காகியுள்ளதுடன், 3,030 க்கும் அதிகமான உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டம் தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “கொவிட் தொற்றுப் பரவல் எல்லைகளை அறியாது. இந்தத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னிலையில் நின்று பணியாற்றுவோருக்கும் மக்களுக்கும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் உதவ வேண்டியது எமது கடமையாகும். இவ்வாறான நெருக்கடியான காலப்பகுதியில், நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் உதவுவதற்கு யூனியன் அஷ்யூரன்ஸ் அர்ப்பணிப்புடன் செயலாற்றும்.” என்றார்.
இவ்வாறு வழங்கப்பட்ட மருத்துவ சாதனங்களில் உயர்அழுத்தத்திறன் கொண்ட ஒட்சிசன் இயந்திரங்கள் (highflow oxygen machines), அவசர ட்ரொலிகள் (emergency trolleys), வீடியோ லெரிங்கோஸ்கோப்ஸ் (video laryngoscopes) மற்றும் வென்டிலேற்றர்கள் (ventilators) போன்றன அடங்கியிருந்ததுடன், இவை மதவாச்சி ஆதார வைத்தியசாலை, அனுராதபுரம் போதனா வைத்தியசாலை, கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் கம்புருபிட்டிய ஆதார வைத்தியசாலை ஆகியவற்றுக்கு ஜுன் மாதம் 24, 25 மற்றும் 30 ஆம் திகதிகளில் கையளிக்கப்பட்டன.
3 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
2 hours ago