2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

'Leapset CSE Lounge'

A.P.Mathan   / 2015 பெப்ரவரி 04 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கணனி விஞ்ஞான மற்றும் பொறியியல் பீடத்தில் 'Leapset CSE Lounge' பகுதியை Leapset நிறுவனம் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துள்ளது. இதன் மூலம் இலங்கையில் காணப்படும் தொழில்நுட்ப ரீதியில் முன்னேற்றம் கண்ட பல்கலைக்கழகத்துடன் முக்கிய உறவை Leapset நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் உப வேந்தரான பேராசிரியர் ஆனந்த ஜயவர்தன பங்கேற்றிருந்தார். அத்துடன் பல்கலைக்கழகத்தின் ஏனைய சிரேஷ்ட அங்கத்தவர்களும் பங்கேற்றிருந்தனர். உபவேந்தர் கருத்து தெரிவிக்கையில், பல்கலைகழகத்தின் புத்தமைவு மற்றும் தொழில்முயற்சியாண்மை தொடர்பான மேம்படுத்தல் செயற்பாடுகளுக்கு இந்த புதிய அங்குரார்ப்பணம் என்பது பெருமளவு பங்களி;ப்பு வழங்குவதாக அமைந்திருக்கும் என்றார்.
 
கலிபோர்னியா நகரை மையமாக கொண்ட தொழில்நுட்பசார் செயற்பாடுகளில் ஈடுபடும் நிறுவனமாக Leapset அமைந்துள்ளது. இந்நிறுவனத்தின் மூலமாக Leapset Restaurant Operating System (ROS) வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ள சிலிக்கன் வெலி பகுதியைச் சேர்ந்த நிறுவனம் என்பதற்கு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. புதிதாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ள Lounge பகுதி என்பது, சிலிக்கன் வெலி பகுதியில் அமைந்துள்ள பெருமளவான நிறுவனங்களில் காணப்படும் இட வசதிகளை கொண்டதாக அமைந்துள்ளது. மாணவர்களுக்கு சிலிக்கன் வெலி பகுதியில் காணப்படும் அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்த பகுதி அமைந்திருக்கும். இவர்களுக்கு நவீன போக்குகள், புத்தமைவு தொடர்பான தொழில்நுட்ப பயிற்சிப்பட்டறைகள் மற்றும் செயற்பாடுகளை போதிக்கும் பகுதியாக அமைந்திருக்கும். இந்த பகுதியை நிறுவுவதன் நோக்கம், மாணவர்கள் மத்தியிலிருந்து புதிய சிந்தனைகளையும் புத்தமைவான மாதிரிகளையும் வெளிக்கொண்டுவருவதாக அமைந்துள்ளது. 

Leapset நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஷனில் பெர்னான்டோ கருத்து தெரிவிக்கையில், 'உலகில் காணப்படும் பெருமளவான புத்தமைவான தொழில்நுட்ப கம்பனிகளின் அமைவிடமாக சிலிக்கன் வெலி பகுதி அமைந்துள்ளது. இந்நிறுவனங்களின் மூலமாக உலகளாவிய ரீதியில் காணப்படும் முன்னணி பல்கலைக்கழகங்களுடன் முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கைகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஸ்டான்ஃபேர்ட் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி பிரெட்ரிக் டேர்மன் என்பவரின் மூலமாக சிலிக்கன் வெலி பகுதி தாபிக்கப்பட்டிருந்தது. தனது மாணவர்கள் மத்தியில் ஊக்குவிப்புகளை ஏற்படுத்தி, புதிய பொருட்களை வடிவமைப்பதற்கு அவர்களை கவர்ந்திருந்ததுடன், தமது சொந்தகம்பனிகளை ஆரம்பிக்கவும் வலுவூட்டியிருந்ததன் மூலமாக இந்த செயற்பாட்டை அவர் முன்னெடுத்திருந்தார். இதன் மூலமாக HP மற்றும் General Electric போன்ற பாரிய நிறுவனங்கள் தோற்றம் பெற ஏதுவாக அமைந்திருந்தன. இந்த மனநிலையை நாம் இலங்கையிலும் ஏற்படுத்த விரும்புகிறோம். மொரட்டுவ பல்கலைக்கழகத்தை இலங்கையின் ஸ்டான்ஃபேர்ட் பல்கலைகழகமாக நாம் கருதுகிறோம். இலங்கையின் பிராந்திய தொழில்நுட்பத்துறையில் புத்தமைவு மற்றும் தொழில்முயற்சியாண்மையை ஊக்குவிப்பதற்கு இந்த பல்கலைக்கழகம் முக்கிய பங்கை கொண்டுள்ளது' என்றார்.

lounge தொடர்பில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கணனி விஞ்ஞான மற்றும் பொறியியல் பீடத்தின் தலைமை அதிகாரி கலாநிதி. சத்துர டி சில்வா கருத்து தெரிவிக்கையில், 'பொறியியல் மாணவர்களுக்கு இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வளமாக அமைந்துள்ளது. Leapset உடன் நாம் சிறந்த பங்காண்மையை கொண்டுள்ளோம். இதன் மூலம் எமது ஆக்கத்திறனை எம்மால் மேம்படுத்த முடியும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், எமது மாணவர்களை மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கு உதவியாக அமைந்திருக்கும் எனவும் நாம் கருதுகிறோம். பல சிறந்த சிந்தனைகளின் பிறப்பிடமாக இந்த lounge பகுதி அமைந்திருக்கும் என நம்புகிறோம்' என்றார்.

இலங்கையின் முன்னணி பல்கலைக்கழகங்களுக்கு Leapset தொடர்ச்சியான உதவிகளை வழங்குவதன் மூலமாக இந்த துறையில் உத்வேகத்தை ஏற்படுத்த தன்னை அர்ப்பணித்துள்ளது. மொரட்டுவ பல்கலைக்கழகத்தில், இறுதி ஆண்டு திட்டங்களை மேற்பார்வை செய்வதுடன், தொழில்நுட்ப செயலமர்வுகளை மாணவர்களுக்கு முன்னெடுக்கிறது. தொழில் முயற்சியாண்மை அடிப்படையில் பிரத்தியேகமான இடைக்கால நிகழ்வுகளையும் Leapset ஏற்பாடு செய்கிறது.  

'எமது ஆறுமாத கால இடைக்கால நிகழ்வு என்பது தொழில்முயற்சியாண்மை தொடர்பில் மாணவர்களுக்கு ஆழமான புரிந்துணர்வை ஏற்படுத்துவதுடன், சிலிக்கன் வெலி பகுதியில் புத்தமைவுக்கான மத்திய நிலையம் பகிர்ந்து கொள்வதை போன்ற உத்வேகத்தை பகிர்ந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. இந்த துறையில் காணப்படும் முதல் நிகழ்ச்சித்திட்டமாக இது அமைந்துள்ளதுடன், மாணவர்களுக்கு தொழில்முயற்சி அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் வகையிலும் அமைந்துள்ளது. இதில் எமது உற்பத்தி செயலணிகளுடன் செயலாற்றுவது, புதிய தயாரிப்புகளுக்கான சிந்தனைகளில் ஈடுபடுவது, நிர்வாகத்துக்கு புதிய சிந்தனைகளை வழங்குவது போன்ற செயற்பாடுகளை ஆறு மாத காலப்பகுதிக்கு முன்னெடுப்பார்கள்' என Leapset பொது முகாமையாளர் ரசிக கருணாதிலக தெரிவித்தார்.

Leapset தொழில்நுட்ப கட்டமைப்பு என்பது இலங்கையில் வடிவமைக்கப்பட்டிந்தது. இதனை உயர் திறன் வாய்ந்த பொறியியலாளர் அணி வடிவமைத்திருந்தது. இலங்கையின் தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணி தொழில் வழங்குநர்களில் ஒன்றாக Leapset வளர்ச்சியடைந்துள்ளது. அதிகரித்துச் செல்லும் கேள்விகளை நிவர்த்தி செய்யும் வகையில் படிப்படியாக விரிவடைந்த வண்ணமுள்ளது. கொழும்பில் தனது உயர் திறமை வாய்ந்த ஊழியர்கள் குழாமை கொண்டுள்ளதன் மூலமாக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சந்தையில் வேகமாக பிரவேசிப்பது மற்றும் தீர்வு கட்டமைப்பை தொடர்ச்சியாக விஸ்தரிப்பது போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்க ஏதுவாக அமைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .