2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

டயனாவின் அந்த ஆடைக்கு மௌசு அதிகம்

Editorial   / 2023 ஜனவரி 29 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள புகழ்பெற்ற கலைப்பொருட்கள் சேகரிப்பு மற்றும் ஏல நிறுவனமான சாத்பைஸ் நிறுவனம் நடத்திய ஏலத்தில் வேல்ஸ் இளவரசி டயானாவின் ஆடை 6 இலட்சம் அமெரிக்க டொலருக்கு   விற்பனை ஆகியுள்ளது.

இது நடைபெற்ற ஏலங்களில் அதிக விலைக்கு விற்பனையான ஆடை என்ற பெருமையை டயானாவின் ஆடை பெற்றுள்ளது.

இந்த ஆடை 80 ஆயிரத்தில் இருந்து 1.2 இலட்சம் டொலர் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதை விட 5 மடங்கு அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது என சாத்பைஸ் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த உடையை இளவரசி டயானா கடந்த 1991 ஆம் ஆண்டு அரச குடும்ப வரைபடத்துக்காக அணிந்தார். அதன்பிறகு 1997-ம் ஆண்டு நடந்த போட்டோஷீட்டில் இந்த உடையை இளவரசி டயானா அணிந்திருந்தார் என கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .