2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

வவுனியாவில் குண்டுதாரிகள்? பாதுகாப்பு தீவிரம்

Freelancer   / 2023 மே 25 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியா நகரப்பகுதிக்குள் மாணவர்களை இலக்குவைத்து குண்டுதாரிகள் வந்துள்ளதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா - இறம்பைக்குளம் மகளீர் வித்தியாலத்திற்கு இன்றைய தினம் சென்ற இருவர் தம்மை பொலிஸார் என அடையாளப்படுத்தியதுடன், பாடசாலையின் காவலாளியை அழைத்து மாணவர்களை இலக்குவைத்து இந்த பகுதிக்குள் இரண்டு குண்டுதாரிகள் நடமாடித்திரிவதுடன், இதனால் மாணவர்களை கூட்டமாக வெளியில் நடமாடித்திரிய வேண்டாம் என்ற தகவலை கூறிச்சென்றுள்ளனர்.

குறித்த தகவலை கடமையில் இருந்த காவலாளி பாடசாலையின் அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளார். 

எனினும் உத்தியோகபூர்வமாக குறித்த தகவல் வவுனியா பொலிஸாரால் எமக்கு வழங்கப்படவில்லை என பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை குறித்த தகவல் காரணமாக நகரப் பாடசாலைகளுக்கு முன்பாக பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .