2023 செப்டெம்பர் 26, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் வீதி பாதுகாப்பு வாரம்; மாணவர் பேரணி

Freelancer   / 2023 மே 24 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன் 

வீதி பாதுகாப்பு வாரத்தையொட்டி, பாடசாலை மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி வவுனியாவில் இன்று (24) நடைபெற்றது. 

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய அதிபர் ஆ. லோகேஸ்வரன் ஆலோசனையில், பாடசாலை வீதி பாதுகாப்பு குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் விழிப்புணர்வு பேரணி, பாடசாலை முன்றலில் ஆரம்பமாகி, மணிக்கூட்டு சந்தி வரை சென்று, அங்கிருந்து மீண்டும் பாடசாலையை வந்தடைந்திருந்தது. 

இந்தப் பேரணியில் வவுனியா பிரதேச செயலாளர் நா. கமலதாசன், பாடசாலை அதிபர், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என 800 பேர் வரையில் கலந்துகொண்டிருந்தனர். (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .