2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

புதிய தவிசாளர் தெரிவு: பொலிஸார் கடும் கெடுபிடி

Niroshini   / 2021 செப்டெம்பர் 29 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் தெரிவு, இன்றைய தினம் (29) காலை 10.30 மணியளவில், உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில், நடைபெற்றது.

இதன்போது, குறித்த தவிசாளர் தெரிவில் கலந்துகொண்டு செய்தி சேகரிக்க, ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மேலும், புதிய தவிசாளர் தெரிவில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், காதர் மஸ்தான் ஆகியோரையும் கலந்துகொள்ள பொலிஸார் அனுமதி மறுத்துள்ளனர்.

மன்னார் பிரதேச சபையை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதோடு, பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவில் கலந்துகொள்ள சென்ற மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள் பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டே, உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், பிரதேச சபையின் பணியாளர்களும் சோதனையின் பின்னர் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

வடமாகாண ஆளுநரால் மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாகிர், தவிசாளர் மற்றும் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் (29) புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .