Johnsan Bastiampillai / 2020 ஒக்டோபர் 21 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவும் சவால்மிகு காலத்தில், இலங்கையர்களுக்கு உதவிடும் நோக்கத்துடன் இலங்கையின் தேசிய அலைபேசிச் சேவை வழங்குனர்களான மொபிடெல், தமது சமூகப் பொறுப்புணர்வு முன்னெடுப்பை நீடித்துள்ளது. அந்த வகையில், இலங்கையின் இரண்டு நிறுவனங்களுக்கு 7,500 முகக்கவசங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

மொபிடெலின் சிரேஷ்ட சந்தைப்படுத்தல் அதிகாரி சஷிக செனரத், 5,000 முகக்கவசங்களை ‘சமஸ்த லங்கா தஹம் சுவந்த’ நிலையத்துக்குக் கையளித்தார். இந்நன்கொடையின் முக்கிய நோக்கம், இலங்கை முழுவதும் உள்ள பாடசாலை மாணவர்களிடையே, இம்முகக்கவசங்களைப் பகிர்ந்தளிப்பதாகும். அத்தோடு, 2,500 முகக்கவசங்கள் வெலிகடை விளக்கமறியல் சிறைச்சாலைக்குக் கையளிக்கப்பட்டது. இது, சிறைக் காவலர்களுக்கும் கைதிகளுக்கும் கையளிக்கப்பட்டது.
தேசிய அலைபேசிச் சேவை வழங்குனர் என்ற வகையில் மொபிடெல், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகத் தேசிய ரீதியாக எடுக்கப்பட்ட பல முன்னெடுப்புகளுக்கு உதவிசெய்துள்ளது. மேலும், மொபிடெலும் SLT உம் ‘மனுசத் தெரன’வுடன் கூட்டிணைந்து 1 மில்லியன் முகக்கவசங்களை பகிர்ந்தளித்தது.
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025