2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

கிரிபத்கொடையில் பாரிய தீ: 12 பேரை மீட்க பிரயத்தனம்

Editorial   / 2021 ஓகஸ்ட் 17 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரிபத்கொடை நகரிலுள்ள நான்கு மாடிக் கட்டடமொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அதற்குள் சிக்கியுள்ள 12 பேரை மீட்கும் செயற்பாடுகளில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

அந்த 12 பேரில், சிறுவர்கள் நால்வரும் அடங்குகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ பற்றியமைக்கான உடனடி காரணங்கள் எவையும் வெளியாகவில்லை எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

அதற்கு முன்னதாக, அந்த கட்டடத்துக்குள் சிக்கியிருப்போதை பத்திரமாய் வெளியில் கொண்டுவரும் முயற்சிகளில், தீயணைப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர் என்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .