2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

மாணவனின் கை, கால்களை பதம்பார்த்த ஆசிரியர்

Freelancer   / 2021 டிசெம்பர் 16 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெயாங்கொடையில் உள்ள பிரபல பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் உயர்தர மாணவரை பிளாஸ்டிக் குழாயால் தாக்கிய சம்வத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியரை கைது செய்த வெயாங்கொடை பொலிஸார், அத்தனகல்ல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய பின்னர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று காலை சட்டத்தரணி ஊடாக வெயாங்கொடை பொலிஸில் முன்னிலையாகியதன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாலையில் நேர வகுப்புக்கு மாணவன் வராததால் குறித்த தொழில்நுட்ப ஆசிரியர், பிளாஸ்டிக் குழாயைக் கொண்டு வந்து மாணவனின் கை மற்றம் கால்களில் கொடூரமாக தாக்கியுள்ளார்.

இதனால் கை, கால்களில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதல் சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோர் வெயாங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவன் இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள தொழில்நுட்ப மாணவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .