2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

தொடரும் கைதிகளின் போராட்டம்

R.Maheshwary   / 2020 நவம்பர் 25 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல கோரிக்கைளை முன்வைத்து அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் முன்னெடுத்து வரும் போராட்டம் 3ஆவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்த கைதிகள், தற்போது கூரை மீதேறி போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த சிறைச்சாலையின்  'A' கூடத்தின் கூரை மீது 10 கைதிகளும் 'C'  கூடத்தின் கூரை மீதேறி 5 கைதிகளும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு போராட்டத்தில் குதித்துள்ள கைதிகள் தமது கோரிக்கைகளை பதாதைகள் மூலம் காட்சிப்படுத்தியவாறு கூரை மீது ஏறி நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அங்குணகொலபெஸ்ஸ சிறைச்சாலையைச் சுற்றி நேற்று முன்தினத்திலிருந்து விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .