2021 ஒக்டோபர் 23, சனிக்கிழமை

இ.போ.ச பஸ் வருமானம் அதிகரிப்பு

R.Maheshwary   / 2020 நவம்பர் 30 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் மாகாணத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்களின் நாளாந்த வருமானம் அதிகரித்துள்ளதென, இலங்கை போக்குவரத்து சபையின்  தென் மாகாண பிரதான முகாமையாளர் ஆர்.வீ. பிரபாத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, தினமும் 6 இலட்ச ரூபாய் வருமானம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டவர்கள் இ.போ.ச பஸ் சேவைகளைப் பயன்படுத்துவதே இந்த வருமான அதிகரிப்புக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


கொரோனாவால் 2.5 மில்லியன் வருமான வீழ்ச்சியை எதிர்கொண்டாலும் தற்போது 3.1 மில்லியன் ரூபாய் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X