2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

இந்தோனேசியாவில் பூமியதிர்ச்சி ; மூவர் பலி

Freelancer   / 2021 ஒக்டோபர் 16 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் ரிக்டர் அளவில் 4.8 ஆக இன்று அதிகாலை பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

துறைமுக நகரமான பாலியின் வடகிழக்கில் உள்ள சிங்கராஜா பகுதியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. 

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. அதிகாலையில் தூங்கி கொண்டிஹிந்த மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததும் வீடுகளை விட்டு அலறியடித்தபடி வெளியே வந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஹில்லி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். 

கரங்காசெம் பகுதியில் வீடு இடிந்ததில் 3 வயது சிறுமி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .