2022 ஜனவரி 23, ஞாயிற்றுக்கிழமை

களைகட்டும் ‘சிங்கிள்ஸ் டே’ கொண்டாட்டம்

Ilango Bharathy   / 2021 நவம்பர் 16 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் கடந்த 2009ஆம் ஆண்டில் இருந்து ஆண்டு தோறும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி “சிங்கிள்ஸ் டே“ (Singles Day) எனப்படும் ஒற்றையர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.இக்காலகட்டத்தில் பொருட்களின் விற்பனை அதிகரித்துக் காணப்படுவதாகவும், குறிப்பாக ஒன்லைன் வர்த்தகங்கள்  அதிகளவில் நடைபெருவதாகவும் கூறப்படுகின்றது. எனினும் கொரோனாப் பரவலால் இம்முறை கடந்த காலங்களைப் போன்று இல்லாமல் விற்பனை சற்று குறைவாக காணப்பட்டதாக கூறப்படுகின்றது.

அந்தவகையில் இம்முறை அலிபாபா நிறுவனம் சுமார் 84.5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வர்த்தகம் செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது. அந்நிறுவன வரலாற்றிலேயே ஒற்றையர் தினத்தில் நிகழ்ந்த குறைவான விற்பனை இதுதான் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X