2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

இனிமேல் ஒவ்வொரு வீடுகளிலும் இது கட்டாயம்

Ilango Bharathy   / 2021 நவம்பர் 24 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூழல் மாசடைவதைத் தடுக்கும் விதமாகவும், எரிபொருள் செலவைக் குறைக்கும் விதமாகவும்   பிரித்தானியாவில் 2030 ஆம் ஆண்டிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசலினால் இயங்கும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படும் என அந் நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜேன்சன் கடந்த வருடம் தெரிவித்திருந்தார்.

மேலும் அதற்கு பதிலாக மின்சாரத்தினால் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க பல  நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.

அந்தவகையில் நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 145,000 மின்னேற்றும் பகுதி நிறுவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  எதிர்வரும்  2022-ஆம் ஆண்டு முதல் புதிதாகக்  கட்டப்படும் வீடுகள் மற்றும் கட்டிடங்களில், மின்சார வாகனங்களுக்கான  மின்னேற்றும் பகுதி (Charging Point) கட்டமைப்பது கட்டாயமாக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மேலும் வேகமான மற்றும் விரைவான கட்டண புள்ளிகளும், பணம் செலுத்துவதற்கான எளிய வழிகளும்” அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .