2023 ஒக்டோபர் 01, ஞாயிற்றுக்கிழமை

எலோன் எடுத்த அதிரடி முடிவு; அதிர்ச்சியில் டுவிட்டர் ஊழியர்கள்

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 31 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக பணக்காரர்களின் வரிசையில் முதல் இடத்தில் உள்ளவரும், டெஸ்லா ,ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகருமான எலோன் மஸ்க் (Elon musk), பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை அண்மையில் கைப்பற்றினார்.

இந்நிலையில் ”டுவிட்டரின் முன்னணி அதிகாரிகள் தன்னையும் டுவிட்டரையும் தவறாக வழிநடத்துவதாகத்” தெரிவித்த எலோன் மஸ்க்,  அதிரடியாக  டுவிட்டரின் தலைமை செயற்பாட்டு அதிகாரி- பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி- நெட் செகல், தலைமை கொள்கை அதிகாரி- விஜயா கடே ஆகியோரை பணி நீக்கம் செய்துள்ளார்.

அத்துடன் மேலும் 7,500 டுவிட்டர் ஊழியர்கள்   விரைவில் பணிநீக்கம் செய்யப்படவுள்ளனர் எனவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் " அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் டுவிட்டரை வாங்கவில்லை எனவும், இதன் மூலம் நான் அன்பு செய்யும் மனிதர்களுக்கு உதவ நினைக்கிறேன்" எனவும்  மஸ்க் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் முதல் கட்டமாக சில அடிப்படை மாற்றங்களை செய்ய விரும்புவதாகவும், ட்விட்டரில் இருக்கும் "ஸ்பேம் களை (spam) நீக்க விரும்புவதாகவும் எலோன்  கூறியுள்ளார்.

அத்துடன், வெறுப்புப் பேச்சு மற்றும் பிரிவினை நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்காதவகையிலும் டுவிட்டரை மேம்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .