Editorial / 2022 ஜூன் 22 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}


பீஜிங், சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பல மாகாணங்களில் பெய்துவரும் கனமழையால் 6 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக அளவில் மழை பெய்துள்ளதாக தெரிவித்த வானிலை அதிகாரிகள் மழை இன்னும் சில நாட்களுக்கு தொடரும் எனவும் எதிர்வுகூறியுள்ளனர்.
இந்த கனமழையின் காரணமாக தெற்கு சீனாவில் உள்ள ஆறுகள் மற்றும் ஏரிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. கரைபுரண்டோடும் வெள்ளத்தில் சாலைகள், பாலங்கள் மற்றும் ரயில் தண்டவாளங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
இதனிடையே இந்த கனமழைக்கு இதுவரை 12 பேர் உயிரிழந்ததாகவும், 1 இலட்சத்து 77 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago