2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

மதிய உணவுக்கு அழைக்கிறார் சோனியா

Editorial   / 2017 மே 26 , மு.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, சுமார் ஒரு டசின் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களை, இன்று (26), மதிய உணவுக்காக அழைத்துள்ளார்.

அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிரணியின் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பாகக் கலந்துரையாடவும் பொதுத் தேர்தலுக்கு முன்பாக எதிரணிகளின் ஒற்றுமையை முன்னேற்றுவதற்காகவுமே, இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

லாலு பிரசாத் யாதவ், ஷரத் யாதவ், அகிலேஷ் யாதவ், மாயாவதி, ஷரத் பவார், எச்.டி. தேவ கௌடா, மம்தா பனர்ஜி, சித்தாராம் யேசூச்ரி, சுரவரம் சுதாகர் ரெட்டி, ஓமர் அப்துல்லா, மு.க ஸ்டாலின்/கனிமொழி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மத்தியில் தற்போது ஆளும் பாரதிய ஜனதா கட்சி, அண்மையில் நடந்த மாநிலத் தேர்தல்களிலும் சிறப்பான பெறுபேறை வெளிப்படுத்தி, ஆட்சியைக் கைப்பற்றியது. இந்நிலையில், ஜூன் மாதத்தில் இடம்பெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில், பாரதிய ஜனதாவின் வேட்பாளர், இலகுவான வெற்றியைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .