2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

மனித மூளையில் ‘சிப்‘; எலோன் அதிரடி

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 06 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக செல்வந்தர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ளவரும்,டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகரும், அதன்  தலைமை செயற்பாட்டு அதிகாரியுமான எலோன் மஸ்க் (Elon musk) குறித்து அதிரடித் தகவலொன்று வெளியாகியுள்ளது.

எலோன் மஸ்க் கார் தொழில்நுட்பத்துறையில் சாதனை படைத்துள்ளதைப் போன்று, மனித மூளையினை கணிணியின் மூலம் இயக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளார் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகிருந்தன.

இந்நிலையில்,  இதை உறுதிப்படுத்தும் வகையில்,  ”மனித மூளைக்குள் சிப்(Chip) ஒன்றைப் பொருத்தி அதன் மூலம், மனதில் நினைப்பதை  கணிணி மூலம் செயற்படுத்தும் திட்டத்தை  எலோன் மஸ்க் விரைவில் தொடங்கியுள்ளார் ”எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பலதரப்பட்ட விமர்சனங்கள் குவிந்தாலும், அறிவியல் ஆர்வலர்கள் இதற்கு வரவேற்பு த் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X