2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

சீனாவில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 20 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின்  ஸாங்கே (Zangke) ஆற்றில் பயணிகளுடன் சென்ற படகு ஒன்று நேற்றுக் (19) காலை திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  10 பேர் மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகமான பயணிகளை ஏற்றிச்சென்றமையே இவ்விபத்துக்கான காரணமாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இதுவரை 40 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர் எனவும்  அவர்களில் 10 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும், 5 பேர் மாயமாகியுள்ளனர் எனவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படகில் மாணவர்கள் பலர் இருந்ததாகக்  கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது. இன்னும் சிலர், பாதுகாப்பு அங்கிகளை அணிந்திருக்கவில்லை என்றும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .