2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

இந்தவார பலன்கள் (09.03.2014 - 15.03.2014)

A.P.Mathan   / 2014 மார்ச் 08 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}இந்தவார பலன்கள் (09.03.2014 - 15.03.2014)

மேடம்
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

ஆர்வமுடன் செயல்பட்டு வெற்றி பெறும் மேட ராசி அன்பர்களே..!

இந்தவாரம் பொருள் வரவு அதிகரிக்கும். பதவி மாற்றம், இடமாற்றம் உண்டாகும். ஆதாயம் அனுகூலம் அதிகரிக்கும். மனதில் நம்பிக்கை, மகிழ்ச்சி கூடும். புதியவர்கள் உதவுவார்கள். எதிர்வந்த தடைகளை முறியடித்து காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். பணவரவு அதிகமாகும்.  சில முயற்சிகளெல்லாம் தள்ளிப்போய் தான் முடியும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தெய்வ பணிகள், பொதுநலக் காரியங்களில் ஈடுபாடு கூடும். பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. பொதுவாகவே இந்தவாரம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும்.

அதிர்ஷ்ட திகதி : 10
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன் (சூரியன்)இடபம்
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

சாதுர்யமாக செயல்பட்டு சாதனை படைக்கும் இடப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் நீண்ட காலமாக மனதில் நினைத்திருந்த காரியம் நிறைவேறும். பணப்புழக்கம் கூடும். முக்கியஸ்தர்களிடமிருந்து உரிய நேரத்தில் உதவிகள் கிடைக்கும். குடும்ப நலம் சிறக்கும். வெளிநாட்டு தொடர்பு பயன்படும். பணவரவு கூடும். அரசு வங்கி இனங்களால் ஆதாயம் உண்டு.  குழப்பம் கவலைகள் மறந்து தெளிவு பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். எழுத்து, கலைத் துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். சுபச்செலவுகள் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். தான தர்ம பணிகளில் ஈடுபாடு கூடும். இந்த வாரம் மகிழ்ச்சியாகவே செல்லும்.

அதிர்ஷ்ட திகதி : 12
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்மிதுனம்
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

வாழ்வில் திட்டமிட்டு செயலாற்றும் மிதுனம் ராசி அன்பர்களே..!
          
இந்தவாரம் அலைச்சல், அசதி அதிகரிக்கும். உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டி வரும்.  காரியம் தாமதமாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவைப்படும். மன அமைதி குறையும். சொல், செயலில் நிதானம் அவசியம். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். இருந்த போதிலும் வார இறுதியில் அலுவலகத்தில்; மதிப்பு மரியாதை கூடும். அதிகாரிகள் ஆதரவாக இருப்பர். பணிகளில் முனைப்போடு செயல்பட்டு முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். நெருங்கிய நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் மற்றும் அதன் மூலம் பணவரவும் புகழும் ஏற்படக்கூடும்.
அதிர்ஷ்ட திகதி : 13
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்கடகம்
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

பிறருக்கு உதவும் மனம் கொண்ட கடக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் வெற்றி வாய்ப்புக்கள் கூடும். உங்கள் முக்கியமான தேவைகள், எண்ணங்கள் நல்லபடியாக நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். பெற்றோர், உற்றார் உறவினர்களால் ஆதாயம் உண்டு. பரிசு, பாராட்டுக்கள் குவியும். இல்லத்தரசிகளின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மதிப்பு, மரியாதை உயரும். ஆனால் வார இறுதியில் பிள்ளைகளால் சிறு சங்கடம் ஏற்படும். தந்தை நலனில் அக்கறை தேவை. நன்கு அறிமுகம் ஆனவர்களுக்கு மட்டும் கடன் கொடுக்கவும். புதிதாக முதலீடு செய்வதை தவிர்க்கவும். தேவையற்ற சஞ்சலங்கள், கவலைகளால் மன அமைதி குறையும்.

அதிர்ஷ்ட திகதி : 15
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்சிம்மம்
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

எண்ணத்திலும் செயலிலும் உறுதி நிறைந்த சிம்ம ராசி அன்பர்களே..!
இந்தவாரம் நல்லவர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். எதிரிகளின் பலம் குறையும். நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். கேட்ட இடத்தில் பண உதவிகள் கிடைக்கும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது அவசியம். விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். இடமாற்றம், பதவி மாற்றம் உண்டாகும். தொடங்கிய காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும். மலையாக தோன்றிய எதிர்;ப்புக்கள் பனிபோல விலகும். எல்லா வகையிலும் இலாபத்தை பெறுவீர்கள். நற்காரியங்கள், பொதுநலப் பணிகளில் ஈடுபாடு கூடும். பணிசுமையில் இருந்து சிறிது விடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட திகதி : 12
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம் : குருபகவான்கன்னி
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

வயதில் குறைந்தவருக்கும் மரியாதை தருகிற கன்னி ராசி அன்பர்களே..!

இந்தவாரம் குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள், சங்கடம் உண்டாகும். தடைகளால் காரியம் தாமதமாகும். எதிலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. பிரச்சினைகள் அடுத்தடுத்து வந்தாலும் அசாத்திய துணிச்சலால் சமாளிப்பீர்கள். புதிய முயற்சிகளை சற்று தள்ளிப்போடுவது நல்லது. புதியவர்களிடம் விழிப்பு தேவை. குழப்பங்களால் மன அமைதி குறையும். வார இறுதியில் பணப்புழக்கம் அதிகமாகும். எதிர்ப்புக்கள் விலகும். அரசு வங்கி இனங்களால் ஆதாயம் உண்டு. ஜலப் பொருட்கள் லாபம் கொண்டு வரும். அலைச்சல் அதிகரித்தாலும் ஆதாயம் உண்டு.

அதிர்ஷ்ட திகதி : 9
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம் : பார்வதிதுலாம்
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

பெரியவர்களை மதிப்புடன் நடத்தும் துலா ராசி அன்பர்களே..!
    
இந்தவாரம் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மனதில் உற்சாகம் பிறக்கும். பிள்ளைகளால் நலம் உண்டாகும். வீடு, மனை, வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். விருந்து, சுற்றுலா கேளிக்கைகளில் நாட்டம் அதிகரிக்கும். அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்கான திட்டப் பணிகள் பலன் தரும். வார இறுதியில் பயணத்தின் போது கவனம் அவசியம். தொழிலில் ஏற்பட்ட போட்டிகள் அனைத்தும் விலகும்.

அதிர்ஷ்ட திகதி : 13
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம் : பார்வதிவிருட்சிகம்
விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

தன்னம்பிக்கையுடன் செயல்படும் விருட்சிக ராசி அன்பர்களே...!

இந்தவாரம் மனதில் தேவையற்ற குழப்பங்கள் உண்டாகும். மறதியால் அவதி ஏற்படும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். பயணத்தால் அலைச்சல், அசதி அதிகமாகும். உடல் சோர்வு  உண்டாகும். ஆனால் வார இறுதியில் நண்பர்கள், சகோதரர்களிடமிருந்து உரிய நேரத்தில் உதவிகள் கிடைக்கும். எதிரிகள் விலகிப்போவார்கள். பொருள் திரட்டுவதில் ஆர்வம் கூடும். கேட்ட இடத்தில் பண உதவிகள் கிடைக்கும். தன்னம்பிக்கை, உற்சாகம் பெருகும். பந்தயங்கள் போன்றவற்றில் வெற்றி வாய்ப்புக்கள் தேடி வரும்.

அதிர்ஷ்ட திகதி : 14
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்

சந்திராஷ்டமம்:
மார்ச் 09ஆம் திகதி காலை 06.55 மணியிலிருந்து மார்ச் 11ஆம் திகதி மாலை 07.22 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.தனுசு
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அனைவரிடமும் பாசமுடன் நடக்கும் தனுசு ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உடன் பிறந்தவர்கள், உற்றார், உறவினர்கள் உதவுவார்கள். அலைச்சல் வீண் போகாது. பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் உண்டு. ஆராய்ச்சியாளர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். தொட்டதெல்லாம் துலங்கும். புதியவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். பகைவர்கள் விலகுவார்கள். வேகத்தை விட விவேகம் முக்கியம். வார இறுதியில் மறதியால் அவதி உண்டாகும். உடல் நலத்தில் கவனம் தேவை. சிறு சிறு பிரச்சினைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திகதி : 15
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்

சந்திராஷ்டமம்:
மார்ச் 11ஆம் திகதி மாலை 7.22 மணியிலிருந்து மார்ச் 14ஆம் திகதி காலை 07.44 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.மகரம்
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

பிறருக்கு உதவும் மனம் கொண்ட மகர ராசி அன்பர்களே..!

இந்தவாரம் பணவரவு கூடும். காரியத்தில் வெற்றி கிடைக்கும். வாழ்க்கைத் துணைவரால் நலம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கான புதிய முயற்சிகள் பலன் தரும். மனதில் நம்பிக்கை உண்டாகும். பொது நலப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வீணாக அலைய வேண்டி இருக்கும்.  போட்டிகளில் வெற்றி கிடைக்கும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த தொகை வந்து சேரும். பொருளாதாரத்தில் தன்நிறைவு பெறுவீர்கள். முக்கியமான காரியம் ஒன்று நண்பர்கள் உறவினர்கள் ஒத்துழைப்புடன் நிறைவேறும். புதியவர்களது தொடர்பு பயன்படும்.

அதிர்ஷ்ட திகதி : 15
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்

சந்திராஷ்டமம்:
மார்ச் 14ஆம் திகதி காலை 07.44 மணியிலிருந்து மார்ச் 16ஆம் திகதி மாலை 06.35 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.கும்பம்
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் கும்ப ராசி அன்பர்களே...!

இந்தவாரம் உடல் நலத்தில் கவனம் தேவை. உடன் பிறந்தவர்களால் மன அமைதி குறையும். சிக்கனமாக வாழ்ந்தால் மட்டுமே புதிய கடன் வராமல் தடுக்க முடியும். அதிகாரிகளை அனுசரித்து போவது நல்லது. தொடக்கம் மட்டுமே உங்களுக்கு இவ்வாறாக இருக்கும். ஆனால் பிற்பகுதியில் பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சலசலப்புக்கள் ஓய்ந்து மகிழ்ச்சி திரும்பும். தர்ம சிந்தனைகள் உண்டாகும். உயர்கல்வி தொடர்பாக நல்ல தகவல் வரும். பேச்சில் திறமையும் இனிமையும் வெளிப்படும். விருந்து, கேளிக்கை உபசாரங்களில் ஈடுபாடு உண்டாகும்.

அதிர்ஷ்ட திகதி : 10
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன் (சூரியன்)

சந்திராஷ்டமம்:
மார்ச் 06ஆம் திகதி மாலை 08.36 மணியிலிருந்து மார்ச் 09ஆம் திகதி காலை 06.55 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.மீனம்
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9- பாதங்கள்.

வெளிப்படையாக பேசத் தயங்கும் மீன ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் சாதாரண காரியத்திற்கே கடுமையாக உழைக்க வேண்டி வரும். மனதில் சிறு சலனங்கள் தோன்றியபடி இருக்கும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தாரிடம் சுமூகமாக பழகவும். விரும்பாத இடத்திற்கு இடமாறுதல்கள் வந்து சேரும். சக பெண்கள் ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பேச்சு, செயலில் நிதானம் தேவை. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம். சிலவிதமான சிக்கல்கள் மற்றும் நஷ்டங்கள் ஆகியவைகளை அடைய நேரிடும். இருந்த போதிலும் உடன் பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

அதிர்ஷ்ட திகதி : 14
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .