2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

இந்தவார பலன்கள் (10.08.2014 - 16.08.2014)

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 09 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}இந்தவார பலன்கள் (10.08.2014 - 16.08.2014)
 
மேடம்
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
தைரியத்திற்கும் தன்னம்பிக்கைக்கும் பெயர் பெற்ற மேட ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் சிறப்பான வாரம். பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். உங்கள் கவலைகள் நீங்கும். அனைத்து வேலைகளையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள்.  அநாவசியப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பணியிடங்களில் உங்களுடைய குறைகளை சுட்டிக்காட்ட தயாராக இருப்பபார்கள். அதனால் கவனம் தேவை. சிறு தடைகள் ஏற்பட்டாலும் அவற்றை சமாளிக்கும் தைரியத்தைப் பெறுவீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் சற்று கவனமுடன் இருப்பது அவசியமாகும். கலைத்துறையினர் தங்கள் வேலைகளில் கவனமுடன் இருப்பது நல்லது. இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும்.
 
அதிர்ஷ்ட திகதி :7 
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்
 
 
 
இடபம் 
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
தங்களுடைய நகைச்சுவை பேச்சாலும் புத்திசாலித்தனத்தாலும் மற்றவர்களை தங்கள் வசப்படுத்தும் இடப ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் உங்களுக்கு உற்சாகமான வாரம். பணம் பல வகையில் உங்களை நாடி வரும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வீர்கள். திட்டமிட்ட காரியங்கள் வெற்றியைக் கொடுக்கும். பேச்சுத் திறமையால் நன்மை உண்டாகும். சிலருக்கு மூட்டு சம்மந்தமான பிரச்சனைகள் வரலாம். வேலைகள் அதிகரித்தாலும் அவற்றை செவ்வனே செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் எதிலும் கருத்துடன் செயல்பட்டால் வரவில் சங்கடம் வராது. நீண்ட கால உழைப்பிற்கு தற்போது பலன் கிடைக்கும். குடும்பத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது. உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தைப் பெறுவீர்கள். குறிக்கோளை நோக்கி தைரியத்துடன் முன்னேறுங்கள். 
 
அதிர்ஷ்ட திகதி : 12
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பட்டுதுணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்
 
 
 
மிதுனம்
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
பிறர் மனம் நோகாமல் செயல்படும் மிதுன ராசி அன்பர்களே..!
 
இந்த வாரம் தொடக்கத்தில்  உங்களுக்கு வளர்ச்சிகளுக்கு முட்டுக்கட்டைகள் உண்டாகும். தங்களுடைய பணிகளில் கவனமாக இருப்பது நல்லது. உடல் நலத்தில்  கவனமுடன் இருப்பது நல்லது. மாணவர்கள் படிப்பில் கவனத்துடன் இருப்பது மற்றும் விளையாட்டுக்களின் போது கவனம் தேவை. ஆனால் வார இறுதியில் புதிய பொருட்களை வாங்குவதற்கான யோசனைகள் தோன்றும். விவசாய துறையில் இருப்பவர்களுக்கு இலாபம் உண்டாகும். உழைப்பிற்கு ஏற்ற பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியம் நல்ல முறையில் இருக்கும். மற்றவர்களின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். இந்த வார இறுதி மகிழ்ச்சியாகவே செல்லும். 
 
அதிர்ஷ்ட திகதி :  14    
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள்  
அதிஷ்ட தெய்வம்: பெருமாள்
 
 
 
கடகம் 
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.
 
கருணை உள்ளமும் கண்டிப்பும் மிகுந்த கடக ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் நீங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும். உங்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தவும். வீணான அச்சத்தை விரட்டி விடுங்கள். தெய்வ வழிபாட்டைக் கூட்டிக் கொள்ளவும். மேலதிகாரிகளிடம் ஏற்படும் சிறு சிறு சங்கடங்களை தைரியத்துடன் சமாளிப்பீர்கள். வியாபாரிகளுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். தங்களுடைய திறமைகளுக்கு ஏற்ற அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். பெண்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு தாங்கள் விரும்பி கேட்ட பொருட்கள் கிடைக்கப் பெறுவீர்கள். 
 
அதிர்ஷ்ட திகதி : 12
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி 
 
 
 
சிம்மம்
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
துணிச்சலுக்கும் விடாமுயற்சிக்கும் பெயர் பெற்ற சிம்ம ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் வியாபாரத்தில் புதிய திட்டங்களை நாடிச் செல்வீர்கள். பொருளாதார வளம் கூடும்.  வாகனம் வாங்குவதற்கான யோசனைகள் தோன்றும். வழக்கு விடயங்கள் சாதகமாகவே முடியும். உற்றார், உறவினர்கள் அனுசரணையுடன் நடந்து கொள்வார்கள். சக ஊழியர்களின் ஆதரவுடன் வேலைப்பளுவைக் குறைத்துக் கொள்வீர்கள். அலுவலக வேலை விடயமாக சிறு பயணங்களை மேற்கொள்ள நேரிடும். சில புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடுவது நல்லது. மற்றவர்களின் மீது வைத்துள்ள நம்பிக்கைகள் பலப்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். 
 
அதிர்ஷ்ட திகதி : 11
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, இளம் சாம்பல் 
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)
 
 
 
கன்னி 
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
கண்ணியமும் கலை ரசனையும் மிகுந்த கன்னி ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் வியாபாரத்தில் எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். தலைமையிடத்தில் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். பல தடங்கல்களுக்கு மத்தியில் புதிய முயற்ச்சிகளில் ஈடுபடுவீர்கள். வரவுகள் நன்றாகவே இருக்கும். பெண்மணிகள் நாடி வருபவர்களுக்கு தயங்காமல்; உதவி செய்வார்கள். குடும்பத்தினரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உங்களுடைய புதிய முயற்ச்;சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். விவசாயிகளுக்கு வேலைகள் சுலபமாக முடியும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளைச் செய்வதால் பண விஷயத்தில் சிறு பற்றாக்குறைகள் காணப்படும். இ;ந்த வாரம் மகிழ்ச்சியாகவே செல்லும். 
 
அதிர்ஷ்ட திகதி : 14
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர 
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா
 
 
 
துலாம்
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.
 
நியாயம் ஒன்றே உயிர் மூச்சாக செயல்படும் துலா ராசி அன்பர்களே..!
 
இந்த வாரம்  குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பலப்படும். தொழிலில் முன்னேற்றம் காணப்படும். அதிக நம்பிக்ககையுடன் செயல்களைச் செய்து முடிப்பீர்கள். குடும்பச் சூழ்நிலையும் இதற்கு சாதகமாகவே அமையும். புதிய முயற்ச்சிகளை மேற்கொள்வீர்கள். எதிரிகளுக்கு பதிலடி கொடுக்க தக்க சமயம் இது. வியாபாரிகள் கடுமையாக உழைத்து நற்பலன் பெறுவர். நழுவிப் போன ஒப்பந்தங்கள் தேடி வரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவரின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். பெற்றோரை அனுசரித்து செல்வது நல்லது. 
 
அதிர்ஷ்ட திகதி : 15
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)
 
 
 
விருட்சிகம்
விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.
 
தனது திறமையால் முடியாது என்ற சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விருச்சிக ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் திருப்திகரமாக முடியும். பயணங்களால் பணவரவு உண்டாகும். வியாபாரிகளுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். கூட்டாளிகள் உங்களின் பேச்சிற்கு மதிப்பு கொடுப்பார்கள். சிலர் புதிய வாகனங்களையும் கால்நடைகளையும் வாங்குவீர்கள். சமுதாயத்தில் மதிப்பு கூடும். வியாபாரிகள் திறமைக்கு தகுந்த புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பணவரவிற்கு குறைவு இருக்காது. பெண்கள் கணவரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் உடன் பிறந்தவர்களின் மூலம் பயன் பெறுவீர்கள். 
 
அதிர்ஷ்ட திகதி : 10
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)
 
 
 
தனுசு
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
சோதனைகளையும் சாதனைகளாக்கும் தனுசு ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் உங்களுடைய சிறிய முயற்ச்சிகளும் பெரிய வருமானத்தைக் கொடுக்கும். வீடு மாறும் எண்ணம் உள்ளவர்களுக்கு இது உகந்த நேரம். எதிர்கால கனவுகள் பூர்த்தியாகும் வகையில் திட்டங்களைத் தீட்டி செயல்படுவீர்கள். ஆனாலும் உங்களுடைய திறமைகளை மேலதிகாரிகள் புரிந்து கொள்ள மாட்டார்கள். அதனால் பணியாளர்கள் பொறுமையுடன் தங்களது பணிகளை செய்து வருவது நல்லது. கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். வெளிவட்டார விஷயங்களில் ஆர்வத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். பெண்களுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். 
 
அதிர்ஷ்ட திகதி : 14 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பட்டுதுணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்
 
 
 
மகரம் 
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
நிதானமாக செயல்பட்டு நினைத்ததை அடையும் மகர ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். வேலைகளில் சுணக்கம் இருக்காது. மதிப்பு மரியாதை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆன்மீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள்.;வியபாரிகளுக்கு கடன்கள் குறையும். கூட்டாளிகள் உங்களின் பேச்சுக்களைக் கேட்டு நடப்பார்கள். மேலும் புதிய சந்தைகளை நாடிச் செல்வது நன்மை பயக்கும். வியாபாரிகளுக்கு கையிருப்பு பொருட்களின் மீது அக்கறை அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகளில் தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றியடைவீர்கள். இல்லத்தில் குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். 
 
அதிர்ஷ்ட திகதி : 16
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பட்டுதுணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான் 
 
 
 
கும்பம்
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
பொறுமையின் சிகரமாகத் திகழும் கும்ப ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களின் ஆதரவு குறையும். நண்பர்களால் குழப்பங்கள் வரலாம். மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். விரும்பத்தகாத பணியிட மாற்றங்கள் உருவாகும். வியாபாரத்தில் எதிரிகளை எச்சரிக்கையுடன் கவனிக்கவும். வேலைகளை முன்கூட்டியே யோசித்து செய்வது நல்லது. பெண்கள் குடும்பத்தில் ஒற்றுமையுடன் நடந்து கொண்டால் சிக்கல்களைத் தவிர்க்கலாம். வருவாய் குறையும் வாய்ப்பு உள்ளது. எனவே சிக்கனம் அவசியம். மாணவர்களுக்கு பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். படிப்பில் அக்கறை செலுத்தவும். விளையாட்டில் கவனத்துடன் ஈடுபடவும். 
 
அதிர்ஷ்ட திகதி : 14 
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர 
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா
 
 
 
மீனம் 
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.
 
சொல்லிலும் செயலிலும் தனிமுத்திரை பதிக்கும் மீன ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் தந்தை வழி உறவினர்களால் நன்மை ஏற்படும். உடன் பிறந்தவர்கள் அன்புக்கரம் நீட்டுவார்கள். கவலைகள் படிப்படியாக குறையும். தைரியத்துடன் எதையும் சாதிக்கும் வல்லமை பெறுவீர்கள். கடிதப்போக்குவரத்தால் அனுகூலம் உண்டாகும். மேலதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவர். சக ஊழியர்களை நம்ப வேண்டாம்.புதிய முயற்ச்சிகளை மேற்கொண்டு வெற்றியடைவீர்கள். கையிருப்பு பொருட்களுக்கு மதிப்பு கூடும். நண்பர்கள் மூலமாக சில இடையூறுகள் ஏற்படலாம்.. மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவர். 
 
அதிர்ஷ்ட திகதி : 15 
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .