2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

இந்தவார பலன்கள் (17.08.2014 - 23.08.2014)

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 16 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}இந்தவார பலன்கள் (17.08.2014 - 23.08.2014)
 
மேடம்
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்க.
 
நல்ல செயல்களால் வாழ்வில் முன்னேற்றம் காணும் மேட ராசி அன்பர்களே..!
 
இந்த வாரம் தியாக குணம் பின்பற்றுவதால் ஒற்றுமை சீராகும். உறவினர்களின் கூடுதல் அன்பு உதவி மனதில் நெகிழ்ச்சியை தரும். பிள்ளைகளின் செயல்களால் துன்பம் அதிகரிக்கும். எதிரிகள் விலகுவர். இல்லறத்துணை உதவிகரமாக நடந்து கொள்வர். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலங்களை அக்கறையுடன் பாதுகாக்க வேண்டும். தொழில் ஸ்தானத்தில் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். பெண்கள் குடும்பத் தேவையை நிறைவேற்றுவதில் சிக்கனம் மேற்கொள்வர். மாணவர்கள் நண்பர்களுடன் படிப்பு தவிர மற்ற விஷயங்களை விவாதிக்க வேண்டாம். 
 
அதிர்ஷ்ட திகதி : 19
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன் (சூரியன்)
 
 
 
இடபம் 
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
சொன்ன சொல்லை காப்பாற்றுவதில் அக்கறையுள்ள இடப ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் பழகுபவர்களிடம் கூடுதல் மதிப்பு மரியாதை பெறுகிற வகையில் செயல்படுவீர்கள். தேவைக்கேற்ப பணவரவு உண்டாகும். பிள்ளைகளின் எதிர்கால வாழ்வு சிறக்க சில திட்டங்களை  உருவாக்குவீர்கள். ஆரோக்கியம் பலம் பெறும் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பெண்கள் குடும்ப உறுப்பினர்களின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவர். மாணவர்கள் ஞாபகத்திறனை வளர்த்து படிப்பில் வியத்தகு தேர்ச்சி விகிதம் பெறுவர். வியாபாரத்தில புதிய முயற்ச்சி வெற்றியை தரும்.
 
அதிர்ஷ்ட திகதி : 21
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
 
 
 
மிதுனம்
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
அன்பும் பண்பும் நன்மையை பெற்று தரும் என வாழும் மிதுன ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் பேசும் வார்த்தை இனியதாக அமையும். உடன் பிறந்தவர் ஓரளவு உதவுவர்.  வாகனத்தில் பராமரிப்பு பயணமுறையை எளிதாக்கும். விஷம் தீண்டும் வாய்புகள் அதிகம் உள்ளதால் கவணம் தேவை.இல்லறத்துணை உங்களுக்கு நல்ல ஆலோசனை வழங்குவார். தொழில் வியாபாரம் சராசரி அளவில் இயங்கும். பணியாளர்கள் கூடுதல் வேலைவாய்ப்பை விரும்பி ஏற்றுக் கொள்வர். பெண்கள் தாய்வீட்டு உதவி கிடைத்து மகிழ்ச்சி அடைவர். மாணவர்கள் புதியவரை நண்பராக ஏற்பதில் கவனம் வேண்டும். 
 
அதிர்ஷ்ட திகதி : 19
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்
 
 
 
கடகம் 
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.
 
கருணை எளிமையான வாழ்வு முறையை விரும்பும் கடக ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் முக்கியமான சில செயல்கள் நிறைவேற கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். சமூகத்தில் பெற்ற மதிப்பு மரியாதையை கண்ணும் கருத்துமாக பாதுகாப்பீர்கள். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.  வழக்கு விவகாரத்தில் சமரசத் தீர்வு கிடைக்க சிலர் உதவுவர். இல்லறத்துணை குடும்ப ஒற்றுமை சிறக்க பாடுபடுவார். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் கூடுதல் உழைப்பு என்கின்ற நடைமுறை சிரமம் தவிர்க்க உதவும். பெண்களின் உடல் நலத்தில் சில பாதிப்பு தோன்றி மறையும்மாணவர்கள் சக மாணவரின் உதவியால் படிப்பில் முன்னேற்றம் காண்பர். 
 
அதிர்ஷ்ட திகதி : 20
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
 
 
 
சிம்மம்
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
கடமையை நம்பிக்கையுடன் செய்து நற்பலன் பெறும் சிம்ம ராசி அன்பர்களே..!
 
இந்த வாரம் மனதில் குழப்பம், செயலில் தடுமாற்றம் ஏற்படலாம். விவகாரமாக பேசுபவர்களிடம் விலகி இருப்பது நல்லது. உடன் பிறந்தவர்கள் உங்களின் கஷ்டம் தீர உதவுவர். வாகன பயணம் இனிதாக அமையும். புத்திரரின் நற்செயல் மனதை மகிழ்விக்கும். கடன் பிணி தொந்தரவு குறையும். இல்லறத்துணை ஒற்றுமையுடன் நடந்து கொள்வார். தொழில் வியாபார நடைமுறையில் சில மாற்றம் செய்வீர்கள். உற்பத்தி விற்பனை சீராகும். மாணவர்கள் புதிய பயிற்சியினால் பாடங்களை மனதில் எளிதாக பதிய வைப்பர். 
 
அதிர்ஷ்ட திகதி : 18
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம் : பார்வதி
 
 
 
கன்னி 
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
நிகழ்வுகளை அனுபவ பாடமாக எண்ணி செயல்படும் கன்னி ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம்  உடல் நல ஆரோக்கியம் சிறப்பாக அமைந்து பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். அரசு தொடர்பான உதவி கிடைக்கும்.பழகுபவர்களிடம் எதிர்மறை கருத்து பேசுவதால் அவப்பெயர் வரலாம். கவனம் தேவை. சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சியும் உபரி பணவரவும் பெறுவீர்கள். பணியாளர் திறம்பட பணிபுரிந்து பாராட்டு வெகுமதி பெறுவர். பெண்கள் வசதிக்கேற்ப ஆடை அணிகலன்கள் வாங்குவர். மாணவர்கள் நன்றாக படித்து பெற்றோரிடம் பாராட்டு பரிசு பெறுவர். 
 
அதிர்ஷ்ட திகதி : 22
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம் : பார்வதி
 
 
 
துலாம்
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3அம் பாதங்கள்.
 
உழைப்பும் உண்மையும் இரு கண்கள் என போற்றும் துலா ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம்  புதிய முயற்;ச்சி எதிர்பாராத அளவில் வெற்றியை தரும். பேசும் வார்த்தையில் நிதானம் நிறைந்திருக்கும். ஆன்மீக அருள் பெற்றவர்களின் ஆசி கிடைக்கும்.  குடும்பத்தில் மங்கல நிகழ்வுகள்நடக்க வாய்புண்டு எதிரிகளின் செயல்கள் பலம் இழக்கும். இ;ல்லறத்துணையின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவது நல்லது. தொழில் வியாபாரம் செழித்து பணவரவு திருப்திகரமாகும். பணியாளர்களுக்கு சிறு அளவில் சலுகை கிடைக்கும். புதிய சொத்துக்கள் சேரும்.நீண்ட நாள் ஆசை நிறை வேறும்.
 
அதிர்ஷ்ட திகதி : 18
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம் : பார்வதி
 
 
 
விருட்சிகம்
விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.
 
தன்னையும் உணர்ந்து பிறருக்கும் நல்வழி காட்டும் விருச்சிக ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் புதிய திட்டம் செயல்படுத்தி வியாபரத்தை பெருக்கி கொள்வீர்கள். உடன் பிறந்தவர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். விழிப்புணர்வுடன் செயல்பட்டால் இழப்பைத் தவிர்க்கலாம். உடல் நலக்குறைவு இருந்தாலும் ஓரளவு நிலைமையை சமாளித்து விடுவீர்கள். வெளியூர் பயணங்கள் அலைச்சல் உடையதாய் இருக்கும். பிள்ளைகள் மூலம் பெற்றவர்களுக்கு பெருமை உண்டாகும்.தொழிலில் உபரி பணவரவு கிடைத்து சேமிப்பு அதிகரிக்கும். பெண்கள் குடும்பத்திற்காக அயராது பாடுபட கூடியவர்
 
அதிர்ஷ்ட திகதி : 19
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள் 
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்
 
 
 
தனுசு
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
இலட்சியம் நிறைவேற்ற சந்தோஷமாக பணிபுரியும் தனுசு ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் உங்களுக்கு நன்மையாகவே அமையும். எதிர்பார்த்த சலுகைகள் அனைத்தும் கிடைக்கப்பெறுவீர்கள். வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். அலுவலக பணிகளில் சிலரின் கோபங்களுக்கு ஆளாக    நேரிடும்.எனவே பொறுமையைக் கடைபிடிப்பது நல்லது. பணியில் தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்வதற்காக அலைச்சல்கள் பட வேண்டி இருக்கும். உறவினர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். பணியாளர்களுக்கு சம்பள உயர்வுக்கான பேச்சு வார்த்தைகள் நடைபெறும். இந்த வாரம் உங்களுக்கு சுமாராகவே செல்லும்.
 
அதிர்ஷ்ட திகதி : 22
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
 
 
 
மகரம் 
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள். 
 
ஒருமுகத் தன்மையால் பணிகளில் அதிக நன்மை பெறும் மகர ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் மனதில் மகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். வார்த்தைகளில் நிதானம் தேவை தடைபட்டு வந்த சுப நிகழ்ச்சிகளுக்கு மீண்டும் பேச்சு வார்த்தைகள் நடைபெறும்.  வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.  ஆடம்பர பொருட்கள் மீது அதிக நாட்டம் உண்டாகும். கலைஞர்களுக்கு பெரிய வாய்ப்புகள் உண்டாகும். பெண்களுக்கு தன்னம்பிக்கையும் மனதைரியமும் மிகும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். திட்டமிட்டபடி செயல்பட்டால் வருமானத்தை அதிகரிக்கலாம்  குடும்பத்தில் அன்பு மேலோங்கும்.
 
அதிர்ஷ்ட திகதி : 18
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம் : பார்வதி
 
 
 
கும்பம்
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
உயர்ந்த எண்ணம் மனதில் நாளும் வளர்த்திடும் கும்ப ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் உடல் நல ஆரோக்கியம் பாதுகாப்பதில் கூடுதல் கவனம் கொள்வீர்கள். தாமதமாகிய பணி புதிய முயற்ச்சியால் நிறைவேறும். ஆன்மீக கருத்துக்களை மறுத்து பேசுபவர்களிடம் விலகி இருப்பது நல்லது. வீடு வாகனத்தில் பராமரிப்பு மேற்கொள்வதால் பயன்பாட்டு வசதி சீராக கிடைக்கும்.;. தொழில் வியாபாரத்தில் மாற்று திட்டத்தை செயல்படுத்தி நன்மை பெறுவீர்கள். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும். குடும்ப பெண்கள் செயல்களில் குளறுபடி எதிர்கொள்ளுவர். கவனம் தேவை. 
 
அதிர்ஷ்ட திகதி : 23
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்
 
 
 
மீனம் 
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி; முடிய ஆக 9- பாதங்கள்.
 
பிறரின் துன்பம் தீர இயன்ற அளவில் உதவும்  மீன ராசி அன்பர்களே..!
 
இந்தவார தொடக்கம் உங்களுக்கு மிக மகிழ்ச்சியாகவே இருக்கும். எண்ணிய எண்ணங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். பெண்களுக்கு தலைமைக் பொறுப்புக்கள் கூடி வரும். நவீன உக்திகளால் வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பயணங்கள் பயனுடையதாய் இருக்கும். உடல் சோர்வு உண்டாகும். வார இறுதியில் துக்கமான நிகழ்ச்சிகள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும். போக்குவரத்தில் அதிக கவனம் தேவை.  மற்றும் வேண்டாத பேச்சுக்களால் பிரச்சனைகள் உண்டாகும் செய்யும் செயல்களில் சிறு சிறு தவறுகள் தோன்றும்.எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.  
 
அதிர்ஷ்ட திகதி : 19
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .