2022 ஜனவரி 17, திங்கட்கிழமை

வாரபலன்கள் (01.12.2013 முதல் 07.12.2013)

Kogilavani   / 2013 டிசெம்பர் 03 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேஷம்

அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் ஆக 9- பாதங்கள் செய்யும் வேலைகளை திறமையாகச் செய்யும் மேஷ ராசி அன்பர்களே
இந்த வாரம் உணவு மற்றும் ஆரோக்கிய விடயத்தில் கவனம் தேவை. குடும்பத்து பெரியவர்களிடம் மரியாதையுடன்  நடந்து கொள்வது நல்லது. பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். சிக்கனம் தேவை. இல்லையெனில் அவதிப்பட வேண்டி இருக்கும். விரிவாக்கப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள் வியாபாரத்தில்  போட்டிகள் நிலவும். கலைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும். சரியான சந்தர்ப்பத்தில் உறவினர்களின் உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். சக பணியாளர்களுடன் நட்புடன் பழகி  மகிழ்வீர்கள். பொதுவாக இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும்.
அதிஷ்ட தேதி : 6
அதிஷ்ட நிறம்:  வெள்ளைஇ வெளிர் மஞ்சள்
அதிஷ்ட தெய்வம்: பெருமாள்.

சந்திராஷ்டமம்:

டிசெம்பர் 01 மணி 02.00 மு.ப இல் இருந்து டிசெம்பர் 03 மணி 02.38 மு.ப வரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக  நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்ச்சிகள் புதிய தொழில் தொடங்குதல, வேண்டாத பிரச்சனையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்கவும்.
குறிப்பு: இந்த  வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

ரிஷபம்

கிருத்திகை 2,3,4,ரோகிணி, மிருகசீரிஷம் 1-2ம் பாதங்கள் ஆக 9- பாதங்கள் தரும சாஸ்திரங்களில் நம்பிக்கை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே
இந்த வாரம் வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். முயற்ச்சியின் மூலம் மட்டுமே வெற்றியை அடையலாம். விழிப்புணர்வுடன் செயல்படுவதால் இழப்பைத் தவிர்க்கலாம். உடல் நலக்குறைவு இருந்தாலும் ஓரளவு நிலைமையை சமாளித்து விடுவீர்கள். மற்றவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பணவரவுகள் நன்றாக இருந்தாலும் அதற்கேற்ற செலவுகள் உண்டாகும். எந்த ஒரு விஷயத்திலும் கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் பெற்றவர்களுக்கு பெருமை உண்டாகும். கடின உழைப்பால் விற்பனை அதிகரித்து லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். இந்த வாரம் சிக்கனத்துடனும் பொறுமையுடனும் இருந்தால் மிக மகிழ்ச்சியான வாரமாக அமையும்.
அதிஷ்ட தேதி : 2
அதிஷ்ட நிறம் : வெள்ளைஇ இளம் சாம்பல்
அதிஷ்ட தெய்வம்: சிவன் ( சந்திரன் )
சந்திராஷ்டமம்:

நவம்பர் 29மணி 10.55 மு.ப இல் இருந்து  டிசெம்பர்  01 மணி 02.00 பி.ப வரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக  நண்பர் அல்லது உறவினர்வீட்டீல் விருந்து உண்ணுதல்இ புதிய முயற்ச்சிகள் புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சனையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்கவும்.

குறிப்பு: இந்த  வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.


மிதுனம்

மிருகசீரிஷம் 2,3, திருவாதிரை இபுனர்பூசம் 1,2,3 ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள் கடுமையான உழைப்பும் களைப்பில்லாத  மனமும் பெற்ற மிதுன ராசி அன்பர்களே           

இந்த வாரம் தங்களது திட்டங்களை எதிர்பாராது மாற்றி அமைக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகளில் சிலரின் கோபங்களுக்கு ஆளாக நேரிடும். பணியில் தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்வதற்காக அலைச்சல்கள் பட வேண்டி இருக்கும். புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. ஆனால் வார இறுதியில் புதிய முயற்ச்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். உறவினர்களிடம் இருந்து உதவிகள் தக்க சமயத்தில்   கிடைக்கப்பெறுவீர்கள். பணியாளர்களுக்கு சம்பள உயர்வுக்கான பேச்சு வார்த்தைகள் நடைபெறும். எனவே இந்த வார தொடக்கம் உங்களுக்கு மகிழ்ச்சியாக இல்லாவிட்டாலும் வார இறுதி உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும்.

அதிஷ்ட தேதி : 1

அதிஷ்ட நிறம் : ஆரஞ்சு, சிகப்பு
அதிஷ்ட தெய்வம் : பார்வதி
சந்திராஷ்டமம்:

டிசெம்பர் 05 மணி 02.35 மு.ப இல் இருந்து  டிசெம்பர் 07 மணி 03.49 பி.ப வரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக  நண்பர் அல்லது உறவினர்வீட்டீல் விருந்து உண்ணுதல், புதிய முயற்ச்சிகள் புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சனையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்கவும்.

குறிப்பு: இந்த  வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.இந்த வார பலன்கள்

கடகம்

புனர்பூசம் 4, பூசம் ,ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள் உற்சாகத்துடன் செயல்களில் ஈடுபடும் கடக ராசி அன்பர்களே
இந்த வாரம் வீடு வாங்கும் எண்ணம் கொண்டவர்கள் அதற்குரிய பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவீர்கள்.  விரும்பிய இ;டமாற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிரமம் இருக்காது. குடும்பத்தில் அமைதியான போக்குகள் காணப்படும். தொழிலில் அதிக அளவில் ஆர்வம் காணப்படும்.  வியாபாரத்தில் புதிய உக்திகளை செலுத்தி வெற்றி காண்பீர்கள். சக ஊழியர்களிடம் மதிப்பைப் பெறுவீர்கள். மங்கள நிகழ்ச்சிகள் நடத்துவதில் உறவினர்களின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கப்பெறுவீர்கள். கையில் பணபுழக்கம் அதிகரிக்கும்.  காரியத்தில் சாதனை அடைதல்.  வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். இந்த வாரம் உங்களுக்கு சுமாராகவே செல்லும்.
அதிஷ்ட தேதி : 2
அதிஷ்ட நிறம் : வெள்ளை, இளம் சாம்பல்
அதிஷ்ட தெய்வம்: சிவன் ( சந்திரன் )

சிம்மம்

மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் ஆக 9- பாதங்கள் யாருக்காகவும் தனது கொள்கைகளை விட்டுகொடுக்காது பயமற்ற பேச்சும் செயலும் கொண்ட  சிம்மம் ராசி அன்பர்களே
இந்த வாரம் எச்செயலிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். எண்ணங்கள் அனைத்தும் படிப்படியாக நிறைவேறும். பணிசுமையில் இருந்து சிறிது விடுபடுவீர்கள். பணியில் சம்பள உயர்வுக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும். ஏற்றுமதி இறக்குமதி செய்வோர் பெருத்த லாபம் பெற்று மனம் மகிழ்ச்சியடைவீர்கள். நீண்ட நாளைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். ஆலய தரிசனம் செல்வீர்கள்.  இதனால் மனம் அமைதியடையும்மாற்றுத் தொழிலில் கவனம் செலுத்தி லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். அனுபவ சாலிகளின் ஆலோசனைகளைப் பின்பற்றி வெற்றி கொள்வீர்கள். பெண்களுக்கு தாய் வழியில் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். ஆக இந்த வாரம் உங்களுக்கு மிக மகிழ்ச்சியாகவே செல்லும்.

அதிஷ்ட தேதி : 1
அதிஷ்ட நிறம் : சிகப்பு, ஆரஞ்சு            
அதிஷ்ட தெய்வம் : சிவன் ( சூரியன் )

கன்னி

உத்திரம் 2,3,4அஸ்தம்  சித்திரை 1 2ம் பாதங்கள் ஆக 9- பாதங்கள் கம்பீரமான தோற்றத்திற்கு சொந்தக்காரரான  கன்னி ராசி அன்பர்களே
இந்த வாரம்
பிள்ளைகள் பொறுப்பணர்ந்து செயல்படுவார்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து முன்னேற்றம் அடைவீர்கள். முன் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் எதிர்பாராத நஷ்டங்களை தவிர்க்கலாம். நண்பர்களின் உதவிகள் மகிழ்ச்சியுடையதாக இருக்கும். வரவிற்கேற்ற செலவுகள் உண்டாகும். இனிமையாக பேசி மற்றவர்களைக் கவர்ந்து லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். குடும்ப செலவுகள் அதிகமாக காணப்படும். தேவையில்லாத பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தை பெருக்கி  லாபமடைந்து மகிழ்ச்சியடைவீர்கள் .  சில சமயங்களில் பணி சுமைகள் அதிகரிக்கும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.
அதிஷ்ட தேதி : 4
அதிஷ்ட நிறம் : ஆரஞ்சுஇ சிகப்பு
அதிஷ்ட தெய்வம்: பார்வதி

துலாம்
சித்திரை 3,4சுவாதி, விசாகம்1,2,3-ம் பாதங்கள். உயர்ந்த எண்ணங்கள் கொண்ட துலா ராசி அன்பர்களே    
இந்த வாரம் உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள் மனவேதனையைக் கொடுப்பார்கள். வியாபாரிகள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். உடல் நலம் பாதிப்படையும்.  பெற்றோரின் உடல் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. தேவையில்லாத பயங்கள் மனதில் குழப்பத்தை உண்டு பண்ணும்.  மாணவர்கள் நண்பர்களுடன் வீண் பொழுது போக்குவார்கள் . பெரியவர்களிடத்தில் மரியாதையுடன் நடந்து கொள்வது அவசியம். எந்த சூழலிலும் உங்களுடைய பிரச்சனைகளை வெளிப்படுத்த வேண்டாம் புதிய மனம் சஞ்சலமடையும் . எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும். இதனால் வீணாண சிரமங்கள் ஏற்படும். இந்த வாரம் கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.
அதிஷ்ட தேதி : 4
அதிஷ்ட நிறம் : ஆரஞ்சு, சிகப்பு
அதிஷ்ட தெய்வம்: பார்வதி

விருட்ச்சிகம்
விசாகம் 4, அனுசம் இகேட்டை முடிய ஆக 9- பாதங்கள் Nஐhதிடத்தில் அதிக ஈடுபாடு காட்டும் விருட்ச்சிக ராசி அன்பர்களே.                                 
இந்த வாரம் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும் .நவீன உக்திகள் மூலம் வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் காரியங்களில் வெற்றி உண்டாகும்.  உயர் அதிகாரிகளை சந்தித்து பேட்டிகள் கிடைக்கும். இல்லத்தில் சுப செலவுகள் உண்டாகும். பெண்களுக்கு தன்னம்பிக்கையும் மனதைரியமும் மிகும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். திட்டமிட்டபடி செயல்பட்டால் வருமானத்தை அதிகரிக்கலாம்  குடும்பத்தில் அன்பு மேலோங்கும். முயற்ச்சி செய்தால் காரியங்களில் வெற்றியடையலாம். இந்த வாரம் மிக மகிழ்ச்சியாகவே செல்லும்.
அதிஷ்ட தேதி : 7
அதிஷ்ட நிறம்:  கருப்பு தவிர
அதிஷ்ட தெய்வம்: பிரம்மா

தனுசு
மூலம், பூராடம்,  உத்திராடம் 1-ம் பாதம் ஆக 9- பாதங்கள் உயர்ந்த சிந்தனையும் எழுத்தாற்றலும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே
இந்த வாரம்; வியாபாரம் சம்மந்தமாக புதிய கிளைகளை தொடங்க முயற்ச்சி செய்வீர்கள். ஓரளவு பண வரவின் மூலம் திருப்தி காணப்படும். பெண்களுக்கு திடீர் நட்புக்கள் உண்டாகும். எதிர்பாராத விதங்களில் வருமானங்கள் கூடும்.

ஆனால் வார இறுதியில்  எதிலும் ஜாக்கிரதையாக இருப்பது அவசியமாகும்.  வீணான  அலைச்சல் காணப்படும் .
வேண்டாத பேச்சுகளால் மனசங்கடங்கள் உருவாகும். நிதானத்தை கடைபிடிப்பது அவசியமாகும்.  உறவினர்களிடம் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கூட்டுத்தொழிலில் ஏமாற்றங்கள் உண்டாகலாம்.  எனவே இந்த வாரம் மிகவும் கவனத்துடன் இருப்பது அவசியமாகும். 
அதிஷ்ட தேதி : 2
அதிஷ்ட நிறம் : வெள்ளை, இளம் சாம்பல்
அதிஷ்ட தெய்வம்: சிவன் ( சந்திரன் )


மகரம்
உத்திராடம் 2, 3,  4 திருவோணம், அவிட்டம் 1, 2 -ம் பாதங்கள் ஆக 9- பாதங்கள் தர்மம் செய்வதில் அதிக ஈடுபாடு கொண்;ட மகர ராசி அன்பர்களே                      

இந்த வாரம் பூர்வீக சொத்து பிரச்சனைகள் தீரும். பிற இன மக்கள் தங்களுக்க உதவுவார்கள். அரசினரால் கிடைக்கப் பெறும் செய்திகள் அனுகூலமாக இருக்கும். ஆரோக்கியத்துடன் இருப்பதால் கடமையில் ஆர்வம் பிறக்கும். லாபம் சுமாராக இருக்கும். பணி சுமையில் இருந்து விடுபட்டு விடுதலை காண்பீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்று நடப்பார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்ச்சியில் ஈடுபடுவீர்கள்.  ஆனாலும் வார இறுதியில் அனாவசியமாக செலவுகள் உண்டாகும்.     இதனால் சிறிது  உடல் நலம் பாதிக்கப்படும்.  பணத்திற்கு தட்டுப்பாடுகள் காணப்படும் .  ஒரு சில இடங்களில் வெற்றிகள் கிடைக்கும்.  எனவே இந்த வாரம் உங்களுக்கு மிக சுமாராகவே செல்லும்.
அதிஷ்ட தேதி : 5
அதிஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள்
அதிஷ்ட தெய்வம் : பெருமாள்.

கும்பம்
அவிட்டம்3, 4, சதயம் பூரட்டாதி1,2,3 ம் பாதங்கள் ஆக 9- பாதங்கள். கலைகளில் அதிக ஈடுபாடு காட்டும்; கும்ப ராசி அன்பர்களே.  
இந்த வாரம் புதிய முயற்ச்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும். பணவரவுகள் நன்றாகவே இருக்கும்.   வயது மூத்தவர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். அதிக பண லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த  சிறு சிறு சலசலப்புக்கள் நீங்கும். பயணங்கள் அலைச்சல் உடையதாகவே அமையும்.  யாரையும் நம்பாமல் இருப்பது நல்லது. பேச்சு மற்றும் செயல்களில் நிதானத்துடன் செயல்படுவது அவசியம். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப்பெறுவீர்கள். ஆனாலும் சில சமயங்களில் முயற்சியில் தோல்வி உண்டாகலாம். வீண் அலைச்சல்கள் மற்;றும் துக்கம் காணப்படும். செய்யும் செயல்களில் தவறுகள் காணப்படும்

அதிஷ்ட தேதி : 7
அதிஷ்ட நிறம் : ஆரஞ்சு, சிகப்பு
அதிஷ்ட தெய்வம்: பார்வதி
 
மீனம்
பூரட்டாதி 4, உத்திரட்டாதி,  ரேவதி; முடிய ஆக 9-பாதங்கள் எல்லோரிடமும் நேர்மையுடன் பழகும் மீன ராசி அன்பர்களே.  
இந்த வாரம் நீண்ட நாளைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வரவிற்கேற்ற செலவுகள் காணப்படும். எதிர்கால நலன் குறித்து செயல்களில் அக்கறை கொள்வீர்கள். உடல் மற்றும் மனநிலையில் புத்துணர்ச்சி உண்டாகும். மேலதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். புதிய வாகனங்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.வியாபாரத்தில் புதிய வழிகளை கையாண்டு வியாபாரத்தை பெருக்கிக் கொள்வீர்கள். பெண்களுக்கு தலைமைப் பொறுப்புக்கள் தேடி வரும். எதிர்பார்த்த பணிமாற்றம் கிடைக்கப்பெறுவீர்கள். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும். தனித்தன்மையுடன் செயல்பட்டு லாபத்தை அதிகரிப்பீர்கள். குடும்ப முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு பாடுபடுவர். இந்த வாரம் மிக மகிழ்ச்சியாகவே செல்லும்.

அதிஷ்ட தேதி : 3
அதிஷ்ட நிறம் : மஞ்சள் இபட்டுத்துணி
அதிஷ்ட தெய்வம் : குருபகவான்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .