2022 ஜனவரி 22, சனிக்கிழமை

ஹட்டனில் பரதநாட்டிய நிகழ்வு

Editorial   / 2017 டிசெம்பர் 29 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ சண்முகநாதன்   

சர்வதேச ரீதியில் விவசாயத்தை மேம்படுத்தவும் விவசாயிகள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும், பரதநாட்டிய நிகழ்வு, ஹட்டன் டன்பார் மைதானத்தில், எதிர்வரும் 31ஆம் திகதி இடம்பெறவுள்ளது.  

ஐக்கிய இராச்சியத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் “யுடியர்” என்ற அமைப்பின் ஏற்பாட்டில் இந்நடன நிகழ்வு இடம்பெறவுள்ளது.  

ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில், 31ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு, இந்த நடன நிகழ்வு இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஆசிய, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் பேர் பங்குபற்றுகிறார்கள். சரியாக 11 நிமிடங்களுக்கு இந்த நடன நிகழ்வு இடம்பெறவுள்ளது.  

இலங்கையில் நடைபெறும் நடன நிகழ்வில் பங்கேற்கும் நடனக் கலைஞர்கள், பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதோடு, நிகழ்வின் இலங்கைக்கான இணைப்பாளராக நுவரெலியா “லைசியம்” சர்வதேச கல்லூரியின் நடன ஆசிரியர் டி.சசிகரன் உள்ளார். ஹட்டனில் நடைபெறவுள்ள நடன நிகழ்வை, நடன ஆசிரியை ராஜசுலோச்சனா நெறிப்படுத்துவார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X