2022 ஜனவரி 22, சனிக்கிழமை

‘இரத்தக் குளியல்’ நாவல் வெளியீட்டு விழா

Editorial   / 2018 மார்ச் 23 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஸ்டீன் எழுதிய ‘இரத்தக் குளியல்’ நாவல் வெளியீட்டு விழா, மருதானை, கொழும்பு 10இல் அமைந்துள்ள, Dr.AMA.அஸீஸ் மாநாட்டு மண்டபத்தில், எதிர்வரும் 24ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு, நடைபெறவுள்ளது.   

திக்வல்லை கமல் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், நூலின் முதற்பிரதியை, புரவலர் ஹாஸிம் உமர் பெறவுள்ளதுடன், வரவேற்புரையை ஷாமிலா ஷெரீப்பும், நூல் அறிமுகவுரையை சட்டத்தரணி மர்சூம் மௌலானாவும் நிகழ்த்தவுள்ளனர்.  திறனாய்வை டொக்டர்.ஞானசேகரன், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.எம்.அமீன், தமிழ்மிரர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஏ.பி.மதன், பா.ம.ச தலைமை ஆசிரியரான ஏ.எஸ்.இல்யாஸ் பாபு ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர். இந்நிகழ்வின்போது, மனிதநேயன் இர்ஷாத் ஏ.காதருக்கு, சிறப்பு கௌரவம் வழங்கப்படவுள்ளது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X