Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 31 , பி.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித்
“கொத்து ரொட்டி” எனும் தலைப்பிலான சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா, மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில், சனிக்கிழமை(28) நடைபெற்றது.
மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில், தமிழ் சங்க தலைவர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயக்குமார் கலந்துகொண்டு, நூலின் முதற் பிரதியை வெளியிட்டு வைத்தார்.
திருமதி பிரியா கருணாகரனின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந் நிகழ்வில், மட்டக்களப்பு தமிழ் சங்கத் தலைவர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையுரையாற்றினார்.
நூலின் அறிமுக உரையை, மட்டக்களப்பு தமிழ் சங்க செயலாளர் வே.தவராஜாவும் நூலின் வெளியீட்டுரையை சட்டத்தரணி மு.கணேசராஜாவும் நிகழ்த்தினர்.
நூலின் நயவுரையை, கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் திருமதி ரூபி வலன்றினா பிரான்சிஸ் நிகழத்தினார்.
இந்நிகழ்வில், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர் த.பத்மராசா மற்றும் வைத்தியர்களான கந்தசாமி அருளாந்தம், கிருஸ்ணபிள்ளை ரமேஸ் மற்றும் இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago