2022 ஜனவரி 23, ஞாயிற்றுக்கிழமை

நூல் அறிமுக விழா

Editorial   / 2018 நவம்பர் 20 , பி.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெய்யன்

பத்தனை ஸ்ரீ பாத தேசிய கல்வியியற் கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதியும் கல்விமானுமாகிய வ.செல்வராஜா எழுதிய ‘விமர்சனங்களும் ஆய்வுகளும்’ நூல் அறிமுக விழா, பன்விலை விக்னேஸ்வரா விஞ்ஞான பாடசாலையின் பிரதான மண்டபத்தில், நாளை (22) முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது.   

பாடசாலையின் அதிபர் பொன்.இராஜகோபால் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வின் பிரதம அதிதியாக, சமூகச் சேவையாளரும் நெலும் நிறுவன உரிமையாளருமான முத்தையா ஸ்ரீகாந்தன் கலந்துகொள்ளவுள்ளார்.  
நூல் ஆய்வுரையை, பேராதனைப் பல்கலைக்கழக நூலகரும் ஆய்வாளரும் எழுத்தாளருமான இரா.மகேஸ்வரன் ஆற்றவுள்ளார்.  

நூல் அறிமுகவுரையை சு.தவச்செல்வனும் சிறப்புக்கருத்துரையை ஆசிரியரும் எழுத்தாளருமான க.பிரபாகரனும் நிகழ்த்தவுள்ளனர். ஏற்புரையை ஆசான் வ.செல்வராஜா ஆற்றவுள்ளார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X