Editorial / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-இ.சுதாகரன்
துறை நீலாவணைக் கிராமத்தின் முதுபெரும் இலக்கியவாதி, அமரர் துறையூர் க.செல்லத்துரை அவர்களின், முதலாம் ஆண்டு நினைவுப் பேருரை நிகழ்வும், அன்னாரின் படைப்பாக்கங்களின் தொகுப்பான ‘தடம்’ நூல் வெளியீட்டு நிகழ்வும், எதிர்வரும் 22ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை, துறைநீலாவணை மகாவித்தியாலயத்தின், ஒன்று கூடல் மண்டபத்தில், முற்பகல் 9 மணிக்கு, ஓய்வு நிலை அதிபரும் யோகா கலாநிதி, தேசபந்து கா.சந்திரலிங்கம் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் கண்ணகி கலை இலக்கியத் தலைவர், செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன் முதன்மை அதிதியாகவும், திருக்கோயில், வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம், எழுத்தாளரும் கவிஞருமான, ஓய்வு நிலை, வங்கி முகாமையாளர் ஆனந்தா ஏ.ஜீ.இராஜேந்திரம், ஓய்வு நிலை அதிபர் பாவாணர் அக்கரைப்பாக்கியன், கவிஞர் நிலா தமிழின் தாசன், துறைநீலாவணை தில்லையம்பலப் பிள்ளையார் ஆலயத் தலைவர் த.கணேசமூர்த்தி ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும், கல்வி மான்கள் மற்றும் இலக்கியவாதிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
5 hours ago
5 hours ago
04 Dec 2025
04 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
04 Dec 2025
04 Dec 2025