2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கோட்டை ரயில் நிலைய தற்கொலை தாக்குதல்: ஒருவருக்கு சிறை

Princiya Dixci   / 2017 மார்ச் 29 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் 2008ஆம் ஆண்டு பெப்ரவரி 3ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும்  நபருக்கு, 20 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த கனகசபை தேவநாசன் என்பவரை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க, இந்தத் தீர்ப்பை இன்று (29) வழங்கினார்.

அன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டிருந்தனர். கொல்லப்பட்டவர்களில், டி.எஸ் சேனாநாயக்க கல்லூரியின் ​​பேஸ்போல்  அணியைச் சேர்ந்த 12 பேரும் உள்ளடங்குகின்றனர்.

குற்றஞ்சாட்டப்பட்ட கனகசபை தேவநாசனுக்கு எதிரான குற்றப்பத்திரம், சட்டமா அதிபரால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், சந்தேக நகர் மீதான குற்றச்சாட்டு நி‌‌‌‌ரூபிக்கப்பட்டதையடுத்து, இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X