Princiya Dixci / 2017 மே 03 , பி.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா திபான்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மீண்டும் நியமிக்குமாறு கோரித் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பிரதிவாதிகள் தரப்பினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை எதிர்ப்பு தொடர்பான உத்தரவு, ஜூன் 1ஆம் திகதி பிறப்பிக்கப்படும் என, கொழும்பு மாவட்ட நீதிமன்றம், நேற்று (03) உத்தரவிட்டது.
2015ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் திகதி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பாவினால், கட்சியின் புதிய தலைவர் நியமனம் தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
முறையாக மத்திய குழுவைக் கூட்டாமல் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று, கே.டீ. அருன பிரியஷாந்த, மத்தேகொட அசங்க நந்தன ஆகியோரால் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவில், சு.கவின் முன்னாள் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கைக் கொண்டு செல்ல முடியாது என்று, அநுர பிரியதர்ஷன யாப்பாவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணியினால் அடிப்படை எதிர்ப்பு சமர்ப்பிக்கப்பட்டிருந்து.
இந்த வழக்கு, கொழும்பு மாவட்ட நீதிமன்ற பிரதான நீதிபதி சுஜீவ நிஷங்க முன்னிலையில் எடுத்துக் கொள்ப்பட்டபோதே, அது தொடர்பான உத்தரவு, ஜூன் மாதம் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.
25 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
2 hours ago