Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2017 மார்ச் 22 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா திபான்
பிரபல போதைப் பொருள் வர்த்தகரான, வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பொல விதானகே சமன் குமார வின் வழக்கின் தற்போதைய நிலைமை தொடர்பில், மே 18ஆம் திகதியன்று மன்றில் அறிவிக்குமாறு, முறைப்பாட்டாளர் தரப்புக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராச்சி, இன்று (22) உத்தரவிட்டார்.
கல்கஸை பகுதியில், 6.7 கிராம் ஹெரோய்ன் வைத்திருந்தார் என்று, சட்டமா அதிபரினால் வெலே சுதாவுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது.
அவர் கைது செய்யப்பட்டமை தொடர்பான பதிவேடு பொலிஸ் நிலையத்திலிருந்து காணாமற் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அரச சட்டத்தரணி லக்மினி கிரிஹாகம மேற்கண்ட விடயத்தை நீதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்ததுடன், அந்தப் பதிவேடு தொடர்பில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் விசாரிக்கப்பட்டு, அறிக்கை பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன், 18,20,21ஆம் சாட்சியார்களுக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்தாகவும் மீண்டும் அழைப்பாணை பிறப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதன்பின்னர், வெலே சுதா சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தமது சேவை பெறுநரின் உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடனேயே நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளார் என்றும் மன்றின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
அதனையடுத்தே, மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்த நீதிபதி, வழக்கை, மே மாதம் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
ஹெரோய்ன் வைத்திருந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, வெலே சுதாவுக்கு மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
28 minute ago
44 minute ago
52 minute ago