Editorial / 2019 ஜூலை 28 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொஹுவல- ஜம்புகஸ்முல்ல மாவத்தையில் ஜீப் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் மீது, அடையாளம் தெரியாதவர்கள் நடத்திய, துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை 1.10 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், காயமடைந்த இருவர் களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், குறித்த ஜீப் வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளாரென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் 38 வயதுடைய மாதிவலை பிரதேசத்தைச் சேர்ந்தவரென்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த மற்றைய நபர், களுபோவிலை வைத்தியசாலையிலிருந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய, சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகளை கொஹுவல பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago