Kogilavani / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாரதி அனுமதிப்பத்திரம், காப்பீட்டுச் சான்றிதழ் மற்றும் வாகன அனுமதிப்பத்திரமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்தியதாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலத்தில் கடமையாற்றி வரும் மேற்படி பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
இவர், மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றபோது ஆடைத் தொழிற்சாலைக்குச் சொந்தமான பஸ்ஸுடன் மோதுண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டை பதிவுசெய்ய வந்த போக்குவரத்து பொலிஸாருடன் சுமார் ஒரு மணித்தியாலமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதன் பின்னரே முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டதாகவும் முறைப்பாட்டின் போது மேற்படி பொலிஸ் கான்ஸ்டபிளிடம் உரிய மோட்டார் சைக்கிளை செலுத்துவதற்குரிய ஆவணங்கள் எதுவும் இருக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
14 minute ago
22 minute ago
27 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
22 minute ago
27 minute ago
43 minute ago